5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: குமரியில் திருமணமான இளம்பெண் தற்கொலை.. மாமியார் எடுத்த விபரீத முடிவு!

திருமணமான 6 மாதங்களில் சுருதி பாபு நேற்று திடீரென தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது தற்கொலைக்கு காரணம் மாமியார் செண்பகவல்லி தான் என அவர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாமியார் தன்னை வெளியிடங்களுக்கு போகக்கூடாது என்றும், கணவர் சாப்பிட்ட பின்பு தான் சாப்பிட வேண்டும் என்றும் கூறி மன உளைச்சலை ஏற்படுத்துகிறார் என தெரிவித்துள்ளார்.

Crime: குமரியில் திருமணமான இளம்பெண் தற்கொலை.. மாமியார் எடுத்த விபரீத முடிவு!
தற்கொலை செய்துக் கொண்ட சுருதி பாபு தனது கணவர் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 22 Nov 2024 11:07 AM

தற்கொலை முயற்சி: கன்னியாகுமரியில் திருமணமான இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தில் மாமியார் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் கோயில்பாளையம் சக்தி பிரதானசாலை பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகளான 24 வயதான சுருதி பாபுவுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி திருமணம் வெகுவிமரிசையாக நடைபெற்றுள்ளது. கார்த்திக் கொட்டாரம் மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் நிலையில் இவர்களுக்கான திருமண வாழ்க்கை திருப்தியாக சென்று கொண்டிருந்தது. அதேசமயம் புகுந்த வீட்டில் சுருதி பாபு மாமியார் கொடுமைக்கு ஆளாக நேரிட்டது.

இதனிடையே திருமணமான 6 மாதங்களில் சுருதி பாபு நேற்று திடீரென தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது தற்கொலைக்கு காரணம் மாமியார் செண்பகவல்லி தான் என அவர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாமியார் தன்னை வெளியிடங்களுக்கு போகக்கூடாது என்றும், கணவர் சாப்பிட்ட பின்பு தான் சாப்பிட வேண்டும் என்றும் கூறி மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்.  அம்மா வீட்டில் கொண்டு போய் விட்டு விடுவேன் என அடிக்கடி சொல்லி வந்ததால்  சுருதி பாபு தற்கொலை முடிவை நாடியிருப்பதாக அவர் பேசியிருக்கும் ஆடியோ வெளியாகி உள்ளது.

Also Read: Tasmac: குடிமகன்களுக்கு ஷாக்.. தீபாவளிக்கு முந்தைய நாள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை!

இதனிடையே மகள் படும் அவஸ்தையை கண்டு மனம் வெதும்பிய சுருதி பாபு பெற்றோர் அவரை அழைத்துச் செல்ல கன்னியாகுமரிக்கு வந்த நிலையில் தான் சுருதி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சுசீந்திரம் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுருதி பாபுவின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமாகி 6 மாதங்களில் இந்த தற்கொலை சம்பவம் நடந்திருந்தால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது

இதனிடையே சுருதி பாபு அழுது கொண்டே கணவரின் தாய் குறித்து பேசிய ஆடியோ ஒன்றை வெளியாகியுள்ளது. அதில், “ரொம்ப சாரி அம்மா. தயவுசெய்து என் கணவரை எதுவுமே சொல்லிடாதீங்க. மறுபடியும் என்னை வீட்டை விட்டுப் போக சொன்னாங்க. அப்பா வீட்டுல கொண்டு போய் விடுவதாக சொன்னாங்க. எங்க வீட்டுல கொண்டு விட்டால் நான் செத்துப் போவேன் என்று சொன்னேன். அவங்க (மாமியார்) பிடிச்ச பிடியா இருக்காங்க. நான் செத்தால் என் பிள்ளைக்கு வேறு யாரும் இல்லை. உனக்கு வேறு குடும்பம் இருக்கிறது என மாமியார் சொன்னாங்க. என்னை கொண்டு போய் என் வீட்டில் விட்டு விடு என்றார்கள்.

வாழா வெட்டியாக இருப்பது எனக்கு விருப்பமில்லை. கணவருக்கும் எனக்கும் இந்நாள் வரைக்கும் ஒரு பிரச்சனையும் ஆனதில்லை. இவங்களால தான் பிரச்சனை. என் புருஷன் பக்கத்தில் நான் உட்கார கூடாது. பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட கூடாது. எச்சில் தட்டை எடுத்து சாப்பிடணும். என்ன மன்னிச்சிடுமா. என் நகை எல்லாம் இரண்டு டப்பாவில் இருக்கும். அந்த இரண்டு டப்பாவையும் அவர்கிட்ட கொடுக்க சொல்லி இருக்கேன். உங்க கிட்ட கொடுத்து விடுவார். தயவு செஞ்சு வாங்கிக்கோங்க. தமிழ்நாட்டு கலாச்சாரப்படி என்னை இறுதிச்சடங்கு பண்ண வந்தாங்கன்னா அது தேவையில்லை. தயவு செய்து அப்படி பண்ண விட்டுறாதீங்க. அவங்க கலாச்சாரத்தில் எதுவும் நடக்கக்கூடாது.

Also Read: ” ஜோசியராக மாறிய எடப்பாடி பழனிசாமி, திமுகவில் ஒருபோதும் விரிசல் இருக்காது” – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

கோயம்புத்தூர் கூட்டி போயிடுங்க இல்லை. இங்கேயே பண்ணுங்க. மின்சார சுடுகாடு இருக்கு. அதுல போய் ஸ்விட்ச் ஆன் பண்ணுங்க போதும். இவங்க சொல்றபடி ஒரு மண்ணும் பண்ணி கிழிக்க வேண்டாம். அம்மா நான் இல்லனா என்னோட நகையில ஏதாவது ஒன்னு தங்கைக்கு கொடுத்துடுங்க. அவளை கொஞ்சம் பார்த்துக்கோங்க .சாரிமா நான் வாழ வெட்டியா இருக்க வேணாம். திரும்பவும் என்னை வீட்டை விட்டு வெளியே போக சொன்னாங்க. அதனால தான் நான் போறேன்” என அந்த வீடியோவில் சுருதி பாபு உருக்கமாக பேசியுள்ளார்.

இதனிடையே மாமியார் கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான செண்பகவல்லி உயிருக்கு ஆபத்தான விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர்,  ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(disclaimer: மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)

Latest News