5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Summon To Actress Kasthuri: நடிகை கஸ்தூரி தலைமறைவு? சம்மன் கொடுக்க வீட்டுக்குச் சென்ற போலீஸ் எமாற்றம்..

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நவம்பர் 3 ஆம் தேதி பிராமண சமூகத்தின் மீது தொடர்ந்து எழுந்து வரும் அவதூறு பிரச்சாரத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி கலந்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி பேசிய கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானது.

Summon To Actress Kasthuri: நடிகை கஸ்தூரி தலைமறைவு? சம்மன் கொடுக்க வீட்டுக்குச் சென்ற போலீஸ் எமாற்றம்..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Nov 2024 12:11 PM

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக நடிகை கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்குச் சென்றபோது வீடு பூட்டி இருந்ததாகவும் அவரது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நவம்பர் 3 ஆம் தேதி பிராமண சமூகத்தின் மீது தொடர்ந்து எழுந்து வரும் அவதூறு பிரச்சாரத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி கலந்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி பேசிய கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவதூறாக பேசியதாக பல தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டது.

கஸ்தூரி பேசியது என்ன?

ஆரிய பண்பாடு வந்த பிறகு சத்திரியர்கள், வைசியர்கள் போன்ற பாகுபாட்டில் எப்படி மற்ற சாதியினர் இணைந்து கொண்டார்களோ அதே போல் கோயில் பணிகளில் சிவாச்சாரியார்கள், ஐயங்கார்கள், அய்யர்கள், பண்டாரங்கள் ஆகியோர் இணைந்து கொண்டனர் என குறிப்பிட்டு பேசினார். மேலும், இவற்றையெல்லாம் மறந்துவிட்டு நேற்று வந்தவர்கள் போல அய்யரையும், ஐயங்காரையும் நடத்துகின்றனர் என்றும், மன்னர்களின் அந்தப்புரம் மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள் எல்லாம் இன்று தமிழ் எங்கள் இனம் என சொல்லும் போது எப்போதோ வந்த அய்யர்களை தமிழர்கள் இல்லை என சொல்ல நீங்கள் யார்? என தெலுங்கு பேசும் மக்களை குறிவைத்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.

மேலும் படிக்க: கோவை தொடர்ந்து விருதுநகர் மாவட்டம்.. புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..

அதோடு, இங்கு தெலுங்கு பேசுபவர்களுக்கு நிறைய கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அமைச்சரவையில் 5 தெலுங்கு மொழி பேசும் நபர்கள் உள்ளனர். நம் உரிமையையும் பிழைப்பையும் அவர்களிடம் இருந்து பிடுங்காமல் நாம் தடுக்க வேண்டும் என கடுமையாக சாடி கருத்துக்களை முன்வைத்தார்.

வலுக்கும் கண்டனங்கள்:

தெலுங்கு சமூகத்தினரை இழிவு படுத்தும் வகையில் நடிகை கஸ்தூரி பேசியதற்காக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வீடியோ மூலம் கண்டனம் தெரிவித்து கஸ்தூரி தனது கருத்தை திரும்ப பெறுமாறு கேட்டுக் கொண்டார். அதேபோல் பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டியும் கண்டனம் தெரிவித்து கருத்தை பின் வாங்குமறு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: நீட் பயிற்சிக்கு சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்த மிரட்டிய ஆசிரியர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!

மன்னிப்பு கேட்ட நடிகை கஸ்தூரி:

கண்டனங்கள் வலுத்த நிலையில் கஸ்தூரி தனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், “ நான் வெளிப்படுத்திய கருத்துக்கள் குறிப்பிட்ட சில நபர்களுக்கு சூழல் சார்ந்து சொல்லப்பட்டவையே தவிர பெரும்பான்மையான தெலுங்கு சமுதாயத்திற்கு பொதுவானவை அல்ல என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

என்னுடைய தெலுங்கு குடும்பத்தை புண்படுத்துவது என்பது எப்போதும் என்னுடைய நோக்கமாக இருந்தது இல்லை. கவன குறைவாக பேசிய வார்த்தைகள் யாரையும் காயப்படுத்தி இருந்தால் அதற்காக நான் வருத்தப்படுகிறேன். அனைவரின் நலன் கருதி நவம்பர் 3 ஆம் தேதி அன்று நான் பேசிய உரையில் தெலுங்கு மக்களுக்கு எதிரான எனது கருத்துக்கள் அனைத்தையும் திரும்ப பெறுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

நடிகை கஸ்தூரிக்கு சம்மன்:

தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது நான்கு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நடிகை கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், விசாரணைக்குச் சென்றபோது வீடு பூட்டி இருந்ததாகவும் அவரது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தலைமறைவாக இருக்கிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.

 

 

Latest News