Savukku Sankar : சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து.. உச்ச நீதிமன்றம் உத்தரவு! - Tamil News | Supereme court cancelled goondas case on youtuber Savukku Shankar | TV9 Tamil

Savukku Sankar : சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து.. உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Updated On: 

25 Sep 2024 18:02 PM

Goondas Cancelled | தமிழகத்தின் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், அவ்வப்போது சர்ச்சைக்குறிய வகையில் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் பெண் காவலர்கள் குறித்து அவதூறு பரப்பிய நிலையில், தேனியில் வைத்து சவுக்கு சங்கரை காவல்துறை கைது செய்தது. அப்போது சவுக்கு சங்கரை குண்டர் சிறையில் அடைக்க சென்னை கமிஷனர் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

Savukku Sankar : சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து.. உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சவுக்கு சங்கர்

Follow Us On

பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் மீதான குண்டாஸை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியதாக கடந்த மே மாதம் தேனியில் வைத்து சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு குண்டாஸின் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவரது தாய் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த நிலையில் அதனை எதிர்த்து தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், தமிழக அரசின் ஒப்புதலின் படி சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Harsha Sai : பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் புகார்.. இளம் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!

பெண் காவலர்கள் குறித்து அவதூறு – தேனியில் வைத்து கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர்

தமிழகத்தின் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், அவ்வப்போது சர்ச்சைக்குறிய வகையில் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் பெண் காவலர்கள் குறித்து அவதூறு பரப்பிய நிலையில், தேனியில் வைத்து சவுக்கு சங்கரை காவல்துறை கைது செய்தது. அப்போது சவுக்கு சங்கரை குண்டர் சிறையில் அடைக்க சென்னை கமிஷனர் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை தொடர்ந்து அவர் 2வது முறையாக கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் மீண்டும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். அதனை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாய், உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் விசாரணையின் போது, எந்தவித காரணமும் இல்லாமல் சவுக்கு சங்கரை 2வது முறையாக காவல்துறை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பதாக அவரது தாயின் தரப்பில் இருந்து வாதிடப்பட்டது.

இதையும் படிங்க : Tirupati Laddu : ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் மீது தேவஸ்தானம் போர்டு புகார்.. நிபந்தனைகளை மீறி கலப்படம் செய்ததாக புகார்!

குண்டர் சட்டத்தை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் ஆட்கொணர்வு மனு

சவுக்கு சங்கரின் தாய் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, குண்டர் சட்டத்தை ரத்து செய்தால் சவுக்கு சங்கர் வெளியே வந்து மீண்டும் கஞ்சா விநியோகம் செய்வார். எனவே சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி அவரது தாயர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. இந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை மறுபரிசீலனை செய்த அறிவுரைக் கழகம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து திரும்ப பெறுகிறோம் என தெரிவித்தது.

இதையும் படிங்க : Harassment : ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. அதிர்ச்சி சம்பவம்!

சவுக்கு சங்கரின் தாயார் மனுவை முடித்து வைத்த நீதிமன்றம்

தமிழக அரசின் இந்த ஒப்புதலை பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், சவுக்கு சங்கரின் தாய் தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதன் மூலம் சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
Exit mobile version