Chennai: கேளம்பாக்கம் சாலையில் திடீரென விழுந்த மாணவி.. தலையில் ஏறிய பேருந்து.. - Tamil News | medical college student dies after being hit by bus wheel near kelambakkam | TV9 Tamil

Chennai: கேளம்பாக்கம் சாலையில் திடீரென விழுந்த மாணவி.. தலையில் ஏறிய பேருந்து..

Published: 

11 Sep 2024 17:30 PM

இருவரும் பயணித்த இருசக்கர வாகனம் கீழக்கோட்டை அருகே சென்றபோது திருப்போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து எதிர்பாராத விதமாக இவர்களது இருசக்கர வாகனம் மீது பின்னால் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஷாலினி மீது பேருந்தின் முன் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் தலை நசங்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த ஸ்வேதா இலேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

Chennai: கேளம்பாக்கம் சாலையில் திடீரென விழுந்த மாணவி.. தலையில் ஏறிய பேருந்து..

மாநகர பேருந்து (கோப்பு புகைப்படம்)

Follow Us On

மாணவி மீது ஏறிய பேருந்து: சென்னை தாம்பரம் அருகே மாநகர பேருந்து சக்கரத்தில் சிக்கி மருத்துவ மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் வீராணம் சாலையில் சந்துரு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகளான 20 வயதான ஷாலினி என்பவர் வண்டலூர் அருகே உள்ள ரத்தினமங்கலத்தில் செயல்படும் தாகூர் மருத்துவ கல்லூரியில் பிஎஸ்சி கார்டியோ டெக்னாலஜி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் செல்வது வழக்கம். இப்படியான நிலையில் இன்று காலை வழக்கம் போல 9.30 மணியளவில் தன்னுடன் படிக்கும் ஸ்வேதா என்ற மாணவியுடன் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். மாணவி ஸ்வேதா மேடவாக்கம் அருகே உள்ள ஜல்லடியன்பேட்டையை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகள் ஆவார்.

Also Read: Accident: வாழை பட பாணியில் விபத்து.. மூட்டை அடியில் உயிரை விட்ட 7 தொழிலாளர்கள்!

விபத்தில் சிக்கிய மாணவி

இவர்கள் இருவரும் பயணித்த இருசக்கர வாகனம் கீழக்கோட்டை அருகே சென்றபோது திருப்போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து எதிர்பாராத விதமாக இவர்களது இருசக்கர வாகனம் மீது பின்னால் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஷாலினி மீது பேருந்தின் முன் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் தலை நசங்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த ஸ்வேதா இலேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மருத்துவ மாணவி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து உடனடியாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மாணவி ஷாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த ஸ்வேதாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

Also Read: MTC Chennai: ஐடிஐ மாணவர்களே.. உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி வேண்டுமா?

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அரசு பேருந்து ஓட்டுநரிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முதற்கட்டமாக பேருந்தின் முன்னால் சென்று கொண்டிருந்த ஷாலினி திடீரென சாலையில் இருந்த மண்ணில் சறுக்கி கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த பேருந்தின் ஓட்டுநர் மாணவி கீழே விழுந்ததை கண்டு பதறிப்போய் பிரேக் போட முயன்றுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக ஷாலினி மீது பேருந்தின் முன் சக்கரம் ஏறி இறங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

Also Read: Tirunelveli: பள்ளிக்கு அரிவாள் கொண்டு வந்த மாணவன்.. காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்!

பொதுமக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர்-கேளம்பாக்கம் 4 வழிச்சாலை எப்போது போக்குவரத்து நெரிசல் நிறைந்தது. இந்த சாலையின் சில இடங்களில் மண் மேடாக காட்சியளிக்கிறது. இதனால் பாதை சுருங்கி இருவழிச்சாலை போல தோற்றமளிக்கிறது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர், மேலு  இதனால் அடிக்கடி அந்த பகுதியில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் மண்மேட்டையாக அகற்றும்படி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும், தாம்பரம் மாநகராட்சிக்கும் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் வாகனங்களில் குறிப்பாக  இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி இந்த இடத்தில் விபத்து உண்டாகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த சாலையில் உள்ள மண்ணை முழுமையாக அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரமக்குடியில் நிகழ்ந்த வீபத்து.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் குரு பூஜையில் கலந்து கொள்வதற்காக நாமக்கல்லில் இருந்து காரில் 9 பேர் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற கார் பரமக்குடி அருகே சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 9 பேரும் உயிர்தப்பினர். ஆனால் படையப்பா என்ற ஊரில் இரண்டு கால்களும் முடிந்த நிலையில் அதில் ஒரு கால் அகற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மீதமுள்ள எட்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விபத்து தொடர்பாக பரமக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

 

பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
Exit mobile version