Tamil Breaking News Live: சென்னையில் வெளுத்து வாங்கும் மழை..இன்றைய செய்திகள் உடனுக்குடன்!

Latest News Today Live Updates: உங்களைச் சுற்றி தொடர்ச்சியாக இன்றைய நாளில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் அனைத்தும் உடனுக்குடன் சுருக்கமாக இந்த பகுதியில் வழங்கப்பட உள்ளது. அனைத்து விதமான செய்திகளும் இடம் பெறும்.

Tamil Breaking News Live: சென்னையில் வெளுத்து வாங்கும் மழை..இன்றைய செய்திகள் உடனுக்குடன்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

12 Dec 2024 12:58 PM

LIVE NEWS & UPDATES

  • 12 Dec 2024 12:58 PM (IST)

    Tamilnadu Rain Live News: மழையை கண்டு அச்சம் வேண்டாம்.. அமைச்சர் ஆறுதல்!

    தமிழகத்தைப் பொறுத்தவரை மழையில் தேவை அதிகமாக உள்ளது. அதேசமயம் மழை அதிகமாக பெய்தால் அதை எதிர்கொள்ளக்கூடிய தைரியம் அரசுக்கு உள்ளது. யாரும் மழையை கண்டு அச்சம் கொள்ள வேண்டாம் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

  • 12 Dec 2024 12:27 PM (IST)

    Rain Live News: தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட்.. மக்களே உஷாரா இருங்க!

    தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில் இன்று 21 செ.மீ., க்கும் அதிகமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

  • 12 Dec 2024 11:04 AM (IST)

    Cuddalore Live News: மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை.. மக்கள் அச்சம்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் குறித்து ஆறாவது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.சாத்தனூர் அணையில் தண்ணீர் வரத்திற்கு ஏற்ப படிப்படியாக தண்ணீர் வெளியேற்றப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கடலூருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • 12 Dec 2024 10:32 AM (IST)

    Pudhukottai Live News: வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவன்.. குழந்தை மரணம்

    புதுக்கோட்டை அருகே செங்கீரை பகுதியில் அபிராமி என்ற பெண்ணுக்கு அவரது கணவர் ராஜசேகர் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இதில் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • 12 Dec 2024 09:52 AM (IST)

    Rajinikanth Birthday Celebration Live News: அன்பு நண்பர் ரஜினி.. இபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து!

    தமிழக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தன் தனித்துவமான நடிப்பாற்றலால் உலகளாவிய ரசிகர் பட்டாளம் கொண்டவரும், என்றும் பழகுவதற்கு இனியவருமான அன்பு நண்பர் #சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திரையுலக வாழ்வில் பொன்விழா ஆண்டில் உள்ள அன்பு நண்பர் திரு.ரஜினிகாந்த் அவர்கள், இன்னும் பல்லாண்டு பூரண உடல் நலத்துடன் ரசிகர்களை மென்மேலும் மகிழ்விக்க வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.

  • 12 Dec 2024 09:16 AM (IST)

    Rajinikanth Birthday Celebration Live News: ரஜினிகாந்த் பிறந்தநாள்.. முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

    நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் – ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன்” என  கூறியுள்ளார்.

  • 12 Dec 2024 08:38 AM (IST)

    திருவண்ணாமலை தீபத்திருவிழா.. சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

    திருவண்ணாமலையில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் 13, 14,15 ஆகிய 3 நாட்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 12 Dec 2024 07:59 AM (IST)

    வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம்!

    கேரளாவில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.அங்கு புரனமைக்கப்பட்ட பெரியார் நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

  • 12 Dec 2024 07:35 AM (IST)

    கனமழை காரணமாக 20 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், கரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், அரியலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

  • 12 Dec 2024 07:20 AM (IST)

    நாகப்பட்டினத்தில் இன்று உள்ளூர் விடுமுறை!

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நாகூர் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு இன்று அம்மாவாட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை தினம்தோறும் பல்வேறு விதமான நிகழ்வுகள் நடைபெற்று கொண்டே இருக்கிறது. அவற்றையெல்லாம் எளிதில் அறிந்துக் கொள்ளும் பொருட்டு நிகழ்வுகள் அனைத்தும் உடனுக்குடன் இங்கு வழங்கப்பட உள்ளது. டிசம்பர் 12 ஆம் தேதியான இன்று கனமழை காரணமாக காஞ்சிரபுரம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேசமயம் சென்னை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.மேலும் திருவண்ணாமலை தீபத்திருவிழா ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் பிறந்தநாள் ஆகியவற்றை முன்னிட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். உங்களைச் சுற்றி பல்வேறு விதமான சம்பவங்களும் நடைபெறலாம். அதனை நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

ஒல்லியாக இருப்பவர்கள் இந்த காரணங்களால் எடை அதிகரிப்பது கிடையாது..!
கிரிக்கெட் வரலாற்றில் யுவராஜ் சிங் படைத்த டாப் 10 சாதனைகள்..!
இரும்பு சத்து குறைவாக உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை!
பச்சை பட்டாணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!