Tirupati Laddu : திருப்பதி லட்டு விவகாரம்.. பரிதாபங்கள் சேனல் மீது பாஜக புகார்!
Parithabangal | Youtube வலைதளத்தில் பரிதாபங்கள் சேனல் மிகவும் பிரபலமானது. இதனை சுதாகர் மற்றும் கோபி ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். சமூகத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் அலசி ஆராய்ந்து அதனை பகடி செய்து வீடியோவாக வெளியிடுவது தான் இந்த சேனலின் வழக்கம். அரசியல், சினிமா என எந்த துறையையும் விட்டு வைக்காமல் பகடி செய்வதால் ரசிகர்கள் மத்தியில் இந்த சேனலுக்கு மிகப்பெரிய அளவில் மவுசு உள்ளது.
திருப்பதியில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது. இந்த விவகாரம் குறித்து பரிதாபங்கள் யூடியூன் சேனல் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அது சேனலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், பரிதாபங்கள் சேனல் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆந்திர மாநில டிஜிபியிடம் தமிழக பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பரிதாபங்கள் சேனலின் வீடியோ சர்ச்சை ஆனது ஏன், தமிழக பாஜக சார்ப்பில் என்ன புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : TN Govt Jobs: மாதம் ரூ.18,000 சம்பளம்.. உள்ளூரிலே பெண்களுக்கு அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!
பரிதாபங்கள் சேனல்
Youtube வலைதளத்தில் பரிதாபங்கள் சேனல் மிகவும் பிரபலமானது. இதனை சுதாகர் மற்றும் கோபி ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். சமூகத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் அலசி ஆராய்ந்து அதனை பகடி செய்து வீடியோவாக வெளியிடுவது தான் இந்த சேனலின் வழக்கம். அரசியல், சினிமா என எந்த துறையையும் விட்டு வைக்காமல் பகடி செய்வதால் ரசிகர்கள் மத்தியில் இந்த சேனலுக்கு மிகப்பெரிய அளவில் மவுசு உள்ளது. வாரத்திற்கு இருமுறை வீடியோ வெளியிடும் இந்த பரிதாபங்கள் குழுவில் இருந்து திருப்பதி லட்டு பரிதாபங்கள் என்ற பெயரில் வீடியோ ஒன்று வெளியானது. ஏற்கனவே திருப்பதி லட்டு விவகாரம் இந்திய அளவில் சர்ச்சையான நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை பார்த்த சிலர் சுதாகர் மற்றும் கோபிக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். அந்த வீடியோ மத உணர்வுகளை புன்படுத்தும் வகையில் இருந்ததாகவும் சிலர் குற்றம்சாட்டினர். இவ்வாறு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பரிதாபங்கள் சேனலில் இருந்து அந்த வீடியோ நீக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க : Petrol & Diesel Price : குறைந்தது கச்சா எண்ணெய் விலை.. பெட்ரோல், டீசல் விலையில் ரூ.3 குறைய வாய்ப்பு!
இந்த நிலையில் பரிதாபங்கள் சேனல் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஆந்திர மாநில டிஜிபியிடம் தமிழக பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கோபி, சுதாகர் இயக்கும் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் லட்டு பாவங்கள் என்ற வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோவில் இந்து மத நம்பிக்கையும் அதன் நடைமுறைகளையும் நேரடியாக குறி வைத்து அவதூறான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக மாட்டு இறைச்சி மீன் எண்ணெய் உடன் கூடிய திருப்பதி லட்டு சுவையாக இருக்கும் என்று அவர்கள் கூறுவது இந்த புனித பிரசாதத்தின் மதம் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளது. மேலும் ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் குறித்தும் அவதூறான கருத்துக்கள் வீடியோவில் உள்ளன. எனவே மத உணர்வுகளை சீர்குலைக்கும் வகையில் வீடுடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Bus Accident: ஸ்ரீவில்லிப்புத்தூரில் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பேருந்து.. 3 பேர் உயிரிழப்பு!
திருப்பதி லட்டு விவகாரம்
ஆந்திராவில் தற்போது முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் திருப்பதியில் வழங்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்புகள் சேர்க்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இது தொடர்பாக குஜராத் ஆய்வகத்தில் லட்டு ஆய்வு செய்யப்பட்ட பிறகு வெளியான அறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டு மிகப்பெரிய அளவில் பரபரப்பை உண்டாக்கியது. அந்த அறிக்கையில் திருப்பதி கோயில் லட்டுவில் மாட்டு கொழுப்பு, பன்றிகொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களில் ஏதோ ஒன்று கலக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.