5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Vijay: விஜய்க்கு மீண்டும் சிக்கலா? த.வெ.க கொடியில் யானை சின்னம்.. பகுஜன் சமாஜ் கட்சி எடுத்த திடீர் முடிவு!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது, த.வெ.க கொடியில் யானை சின்னத்தை 5 நாட்களுக்குள் நீக்க வேண்டும் என தமிழக பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் அணி மாநில துணைத்தலைவர் சந்தீப் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

TVK Vijay: விஜய்க்கு மீண்டும் சிக்கலா? த.வெ.க கொடியில் யானை சின்னம்.. பகுஜன் சமாஜ் கட்சி எடுத்த திடீர் முடிவு!
விஜய்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 20 Oct 2024 08:34 AM

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது, த.வெ.க கொடியில் யானை சின்னத்தை 5 நாட்களுக்குள் நீக்க வேண்டும் என தமிழக பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் அணி மாநில துணைத்தலைவர் சந்தீப் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து தற்போது அரசியல் தலைவராக அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை குறித்து வைத்து தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கி இருக்கிறார். கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னையில் பனையூரில் கட்சி கொடியை அறிமுகம் செய்தார்.

விஜய்க்கு மீண்டும் சிக்கலா?

இது ஒருபக்கம் வரவேற்பை பெற்றாலும், மற்றொரு பக்கம் மிகப்பெரிய அளவி விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழக கொட்டிக்கு எதிராக புகார் ஒன்று எழுந்தது. அதாவது, த.வெ.க கொடியில் இடம்பெற்றிருக்கும் யானையை சுட்டிக் காட்டி தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.

இதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. அதாவது, ஒரு கட்சியின் கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையீடாது என்றும் ஒரு கட்சியின் கொடிக்கு நாங்கள் ஒப்புதலோ, அங்கீகாரமோ வழங்குவது இல்லை என்றும் கூறியது. மேலும், தவெக கட்சி சட்டத்தின் விதிகளை மீறவில்லை என்று கூறியது.

Also Read: புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் மழை பெய்யுமா? வானிலை மையம் தகவல்!

இப்படியான சூழலில், விஜய்க்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, த.வெ.க கொடியில் யானை சின்னம் இருப்பதாக தொடர்பாக தமிழக பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் அணி மாநில துணைத்தலைவர் சந்தீப் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி எடுத்த முடிவு:

அதில், “இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சின்னத்தை தமிழக வெற்றி கழக (TVK) கொடியில் இருந்து நீக்க வேண்டுமென கட்சி கொடி வெளியிட்ட நாளிலிருந்து வலியுறுத்தி வருகிறோம்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கபட்ட (Government Gazette of India) “ஒரு கட்சி, தங்களுக்கென ஒரு கொடி இருந்தால் அந்த கட்சி கொடியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வழங்கப்பட்ட சின்னத்தை போன்றோ, மற்ற கட்சிகளின் சின்னத்தை போலவோ அல்லது சின்னத்தின் மாற்றுரு போன்றோ தங்கள் கொடியில் சின்னங்கள் அமையாமல் கவனித்து கொள்ள வேண்டியது அக்கட்சியின் தார்மீக பொறுப்பாகும் என்ற விதியை மீறுவதாக உள்ளது.

மேலும், பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சேபம் தெரிவித்த நிலையில் இன்றுவரை எந்தவிதமான நடவடிக்கை இல்லாத காரணத்தினால் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு வழக்கறிஞர் அணி – மாநில துணை தலைவர்  சந்தீப் அறிவிப்பு இனைத்துள்ளோம்.

Also Read: தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்!

இதனையே சட்ட முறையான அறிவிப்பாக கருதி யானை சின்னத்தை நீக்க வேண்டும் என அறிவுருத்துகின்றோம். ஐந்து நாட்களுக்குள் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இருந்து யானை சின்னத்தை எடுக்காவிட்டால் சட்டரீதியாலான நடவடிக்கையை சந்திக்க நேரிடும்” என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழக மாநாடு வரும் 27ஆம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படியான சூழலில், விஜய் கட்சி கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்க வேண்டும் என தமிழக பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Latest News