TN Cabinet Reshuffle: தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்.. 3 சீனியர்கள் நீக்கமா? வரலாறே மாறப்போகுது!
அமைச்சரவை மாற்றம்: தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த இடைப்பட்ட காலத்தில் திமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. செந்தில் பாலாஜி கைது, டிஜிபி, தலைமைச் செயலாளர் மாற்றம் போன்றவை நிகழ்ந்துள்ளன. இந்தநிலையில், நாளை மாலை 3.30 மணிக்கு அமைச்சரவை மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த இடைப்பட்ட காலத்தில் திமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. செந்தில் பாலாஜி கைது, டிஜிபி, தலைமைச் செயலாளர் மாற்றம் போன்றவை நிகழ்ந்துள்ளன. இதற்கிடையில் கடந்த சில மாதங்களாவே அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருந்துள்ளது. இந்த நிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சுமார் 471 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் வெளியே வந்துள்ளார். இதனால் திமுகவில் அதிரடி மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நாளை அமைச்சரவை மாற்றம்?
இத்தனை காலம் செந்தில் பாலாஜிக்காகவே அமைச்சரவை மாற்றம் நடக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி வெளியே வந்த பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்யலாம் ஸ்டாலின் முடிவு எடுத்ததாக கட்சி வட்டாரத்தில் கூறப்பட்டது.
இதனால் தற்போது செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்த நிலையில், நாளை அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. நாளை மாலை 3.30 மணிக்கு இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, நிதித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, போக்குவரத்துத்துறை, வருவாய் நிர்வாக துறைட வனத்துறை, சட்டத்துறை, மின்துறை உள்ளிட்ட துறைகளில் அமைச்சர்கள் மாற்றமோ அல்லது துறையில் வேறு ஒரு அமைச்சருக்கு மாற்றத் தருவதோ நடைபெறலாம் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Also Read: பூமி பூஜை நடத்தும் விஜய்.. மாநாட்டுக்கு ரெடியாகும் த.வெ.க.. புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு!
யாரு யாருக்கு எந்த துறை?
நாளை வெளியாகும் அறிவிப்பில், மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக மூன்று பேர் அமைச்சராக பொறுப்பேற்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போது மின்சார துறையை தங்கம் தென்னரசும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை முத்துசாமியும் தற்போது கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி வெளியே வந்த நிலையில், அவருக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையே ஒதுக்கப்படலாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு உயர்கல்வி ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஸ்டாலின் ஆட்சியில் உயர்கல்விக்கு பட்டிலினத்தவரா?
கடந்த ஐம்பதாண்டுகால வரலாற்றில் முதல் முறையாக உயர்கல்விக்கு பட்டியலினத்தவரை தமிழக அரசு நியமிக்க உள்ளது. முதன்முதலில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை பள்ளிக்கல்வி அமைச்சராக்கியவர் ஜெயலலிதா. இவருக்கு பிறகு ஸ்டாலினை இதனை கையில் எடுத்துள்ளார். மேலும், பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜுக்கு பதில் வேறொருவர் வர வாய்ப்புள்ளது.
தற்போது சுற்றுச்சூழல் துறையை கவனித்து வரும் மெய்யநாதன் வேறு துறைக்கு மாற்றப்படும் நிலையில், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், பொன்முடி, எ.வ.வேலு உள்ளட்ட சீனியர் அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது. மேலும், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாசர் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
துணை முதல்வராகும் உதயநிதி?
நாளை நடைபெற உள்ள அமைச்சரவை மாற்றத்தின்போதே உதயநிதியை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அறிவிப்பும் வர வாய்ப்புள்ளது. உதயநிதிக்கு கூடுதலாக எந்தெந்த இலாக்காக்கள் ஒதுக்கப்படும்…? இதற்காக துறைகளை இழக்கப்போகும் சீனியர்கள் யார் யார்..? என்றெல்லாம் கடந்த சில வாரங்களாக வதந்திகள், கேள்விகள் உலா வந்தன.
Also Read: சென்னையில் ரூ.6 லட்சத்திலே வீடு.. ஈஸியா வாங்கலாம்? மிஸ் பண்ணாதீங்க.. தமிழக அரசு அசத்தல் ஏற்பாடு!
ஆனால், சீனியர் அமைச்சர்களின் துறை உதயநிதிக்கு ஒதுக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. “அப்படி யாருடைய துறையையும் பறித்து எனக்கு கூடுதலாக எந்தத் துறையும் வேண்டாம். இப்போதிருக்கும் விளையாட்டுத் துறையே போதும்” என்று உதயநிதி சொல்விட்டதாக தெரிகிறது. முதல்வர் தன் வசம் இப்போது வைத்துள்ள திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையை உதயநிதிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.