CM MK Stalin: கோவை தொடர்ந்து விருதுநகர் மாவட்டம்.. புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..
இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் மதுரை செல்கிறார். அங்கிருந்து அவர் கார் மூலம் விருதுநகர் மாவட்டத்தை சென்றடைகிறார். அங்கு இருக்கும் பொதுப்பணித்துறை மாளிகை முன் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் செல்லும் அவர், பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். முதலில் கன்னிசேரி புதூர் செல்கிறார். அங்கு இருக்கும் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிடுகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக விருதுநகர் சென்றுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட வாரியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் இரண்டு நாட்கள் அவர் கோவை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்ததுடன் திமுக நிர்வாகிகள் கூட்டத்திலும் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அதனை தொடர்ந்து இன்று விருதுநகர் மாவட்டம் சென்றுள்ளார். நேற்றும் இன்றும் என இரண்டு நாட்கள் அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பல தரப்பு மக்களை சந்தித்து குறைகளை கேட்க உள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துக்கொள்ள இருப்பதால் அங்கு பாதுக்காப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
பயணத்திட்டம் என்ன?
இதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் மதுரை செல்கிறார். அங்கிருந்து அவர் கார் மூலம் விருதுநகர் மாவட்டத்தை சென்றடைந்தார். அங்கு இருக்கும் பொதுப்பணித்துறை மாளிகை முன் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடு வழங்கப்பட்டது. விருதுநகர் செல்லும் அவர், பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். முதலில் கன்னிசேரி புதூர் செல்கிறார். அங்கு இருக்கும் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார். மேலும், அங்கு இருக்கும் பட்டாசு தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவரது குறைகளை கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து சூலக்கரையில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்திற்கு சென்று பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து மாலை 4 மணியளவில் விருதுநகர் மாவட்டம் ராமமூர்த்தி சாலையில் உள்ள கந்தசாமி மண்டபத்தில் திமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்டார். இந்த கூட்டத்தில் கட்சி பணிகள் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க: மக்களே உஷார்.. “இனி வரும் புயல்கள்..” மத்திய அரசு பகீர் வார்னிங்!
ரோட் ஷோவில் முதலமைச்சர் ஸ்டாலின்:
கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை முடிந்த பின், ராம்கோ விருந்தினர் மாளிகை செல்லும் வழியில் பிரம்மாண்ட ரோட் ஷோவில் கலந்துக்கொண்டார். ரோட் ஷோவிற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும் இந்த ரோட் ஷோவிற்காக சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் ஒன்று கூடினர். பலரும் முதலமைச்சருடன் ஆர்வத்துடன் கைக்குலுக்கினர் மேலும் மனுக்களை அளித்தனர். அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் மற்றும் தங்கம் தென்னரசுவின் மாவட்டம் என்பதால் இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த இரண்டு நாள் பயணத்திற்காக அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரோட் ஷோ காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதறகாக ஏராளமான போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க: நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்..
நேற்றைய நிகழ்ச்சிள் முடித்த நிலையில் இன்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கிறார். இன்று நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், விருதுநகரில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். மேலும், 40 ஆயிரத்து 148 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்குகிறார். விருதுநகர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் மக்களை சந்தித்து பேசி குறைக்களை கேட்டறிவார்.
இதோடு சேர்த்து மொத்தம் ரூ.101 கோடியில் முடிவுற்ற திட்ட பணிகளையும் அவர் திறந்து வைக்கிறார். பின்னர் விருதுநகர் அருகே பட்டம்புதூரில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.471 கோடியில் 57 ஆயிரத்து 556 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்களை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்த பின் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார்.