4,000 பேருக்கு வேலைவாய்ப்பு.. கூகள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை நேரில் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்.. - Tamil News | tamil nadu cm mk stalin said partnership agreement signed and visited microsoft, google and other companies know more in tamil | TV9 Tamil

4,000 பேருக்கு வேலைவாய்ப்பு.. கூகள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை நேரில் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்..

Published: 

31 Aug 2024 12:42 PM

அமெரிக்க சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின். ஆகஸ்ட் 31 ஆம் தேதி, புலம்பெயர்ந்த தமிழர்களுடன் சந்திப்பு நடத்துகிறார். அதனை தொடர்ந்து செப்டம்பர் 2 ஆம் தேதி, – சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ பயணம் பயணம் மேற்கொள்கிறார். அங்கு 10 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இறுதியாக செப்டம்பர் 7 ஆம் தேதிசிகாகோவில் தமிழர்களுடனான மாபெரும் சந்திப்பு நடைபெறுகிறது.

4,000 பேருக்கு வேலைவாய்ப்பு.. கூகள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை நேரில் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்..

அமெரிக்காவில் முதலமைச்சர் ஸ்டாலின்

Follow Us On

முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்: தமிழ்நாடு முதலமைச்சர் முதலீடுகளை ஈர்க்க 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோவிற்கு சென்ற முதலமைச்சருக்கு மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்றைய தினம் அமெரிக்க முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாடிய அவர், ” தெற்கு ஆசியாவில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு சிறந்த இடமாக இருக்கும்.2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் அளவு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இந்த மாநாடு உதவும்” என பேசினார். இதனை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, நோக்கியா நிறுவனத்திற்கும், தமிழக அரசிற்கும் இடையே ரூ.450 கோடி முதலீட்டில், 100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிறுசேரி சிப்காட்டில் உலகின் மிகப்பெரிய நிலையான நெட்வொர்க் சோதனை வசதி கொண்ட புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


அதேபோல் பேபால் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே 1000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டு மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இது தொடர்பான பதிவை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அந்த நிறுவனங்களுக்கு சென்று பார்வையிட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

Also Read: கேஸ் சிலிண்டர் முதல் ஆதார் கார்டு வரை.. செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறைகள்!

ஆகஸ்ட் 27 தொடங்கி செப்டம்பர் 14 வரையிலான இந்தப் பயண நாட்களின் நோக்கம், தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி அடுத்து வரும் பல தலைமுறைகளுக்குப் பயன் தருவதாக இருக்க வகையில் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஆகஸ்ட் 31 ஆம் தேதி, புலம்பெயர்ந்த தமிழர்களுடன் சந்திப்பு நடத்துகிறார். அதனை தொடர்ந்து செப்டம்பர் 2 ஆம் தேதி, – சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ பயணம் பயணம் மேற்கொள்கிறார். அங்கு 10 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இறுதியாக செப்டம்பர் 7 ஆம் தேதிசிகாகோவில் தமிழர்களுடனான மாபெரும் சந்திப்பு நடைபெறுகிறது.

 

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version