“ஆளுநரா? ஆரியநரா?” தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு.. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்! - Tamil News | tamil nadu cm stalin condemns governor rn ravi over tamil thai vazhthu controversy tamil news | TV9 Tamil

“ஆளுநரா? ஆரியநரா?” தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு.. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆளுநரா? ஆரியநரா? தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு..  முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

ஆளுநர் - முதல்வர்

Updated On: 

18 Oct 2024 18:54 PM

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ” ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்.

 ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் – தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

Also Read: கொடூரத்தின் உச்சம்.. நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு சித்ரவதை.. நெல்லையில் ஷாக்!

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து ‘இந்தி மாதம்’ நிறைவு நாள் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி பாடப்படாததாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய்  வாழ்த்து அவமதிப்பு:

இதற்கு  முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், ஆளுநர் மாளிகையும் விளக்கம் கொடுத்துள்ளது.  அதன்படி, தமிழ்த்தாய்  வாழ்த்து குளறுபடி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என டிடி தமிழ் குழுவுக்கு ஆளுநர் மாளிகை அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “100 வருடங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும் என கூறிய போது பிரச்சாரம் செய்தார்கள். அப்போது பச்சையப்பன் கல்லூரி முதல்வராக இருந்தவர் தமிழ் மொழியே அல்ல.

அதற்கு எதிராக குரல் எழுப்பியவர் மகாகவி பாரதி. அவர் எழுதிய கட்டுரை அன்று இந்து இதழில் வெளியானது. அறிவியல் கண்டுபிடிப்புகளையும், சமூக தத்துவங்களையும் வழங்கியதில் தமிழ் மொழி ஆங்கிலத்தை விட பன்மடங்கு உயர்ந்தது.

மற்றவற்றை கற்றுத் தருவதில் ஆங்கிலத்திற்கு முன்னோடியாக தமிழ் இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் தொடர்ச்சியாக தமிழ்நாட்டை இந்திக்கு எதிராக பேசவைத்துள்ளனர். 50 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் தமிழ் என பேசுபவர்கள் தமிழை இந்தியாவைவிட்டு வெளியே கொண்டு செல்ல செய்தனர்? தமிழ்நாட்டில் மட்டுமே 3வது மொழியை அனுமதிக்க மறுக்கின்றனர். பிற மாநிலங்களில் அனுமதிக்கின்றனர். மக்களை கொண்டு தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர்” என்று கூறியுள்ளார்.

Also Read: அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அகவிலைப்படி உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு!

மத்திய மாநில அரசுகளுக்கிடையே தொடர்ந்து போக்கு போக்கு நிலவுகிறது. மத்திய அரசின் பிரதிநிதிகளாக கருதப்படும் ஆளுநர்கள் மாநில அரசுடன் முட்டிட மோதி வருகின்றனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஆளுநருக்கு மாநில அரசுக்கு தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இப்படியான சூழலில் இன்று ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதித்தாக குற்றச்சாட்டு எழுந்தது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அசத்தலான புதிய அம்சங்களை அறிமுகம் செய்த யூடியூப்!
பப்பாளியை அதிகமாக எடுத்துக்கொள்வதை ஏன் தவிர்க்க வேண்டும் தெரியுமா?
கீர்த்தி சுரேஷ் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!
இந்த குழந்தை யார் தெரியுமா..? பிரபல நாயகி!