Tata Motors: இளைஞர்களே ரெடியா.. 5 ஆயிரம் பேருக்கு வேலை… தமிழக அரசின் புதிய துவக்கம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். 470 ஏக்கர் பரப்பளவில் ஆலையை அமைக்கும் டாடா நிறுவனம், ஜாகுவார், லேண்ட் ரோவர்களின் மின்சார கார்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆலை அமைப்பதன் மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகள் உருவாகும்.

Tata Motors: இளைஞர்களே ரெடியா.. 5 ஆயிரம் பேருக்கு வேலை... தமிழக அரசின்  புதிய துவக்கம்!

முதல்வர் ஸ்டாலின்

Updated On: 

28 Sep 2024 14:33 PM

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். வேலைவாய்ப்புகளை அதிகரிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்கள், தொழில்சாலைகளை உருவாக்கி வருகிறது. சமீப காலமாகவே புதிய முதலீடுகளை அதிக அளவில் தமிழக அரசு ஈர்த்து வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். தமிழ்நாட்டை விரைவில் 1 டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கார் உற்பத்தி ஆலை:

அந்த வகையில் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். கடந்த மார்ச்ச் மாதம் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசிற்கும், டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.

Also Read: அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.. 18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக டாடா மோட்டார்ஸ் குழுமம் ரூ.9000 கோடியை முதலீடு செய்தது. இந்த தொழிற்சாலைகள் மூலம் மின்சார கார்கள், ஆடம்பர கார்கள் உற்பத்தி உற்பத்தி செய்யப்படும்.

5 ஆயிரம் பேருக்கு வேலை:

இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். ரூ.9,000 கோடியில் கார் தயாரிப்பு ஆலை இங்கு நிறுவப்பட உள்ளது.

இதன் மூலம் பனப்பாக்கத்தில் உள்ள புதிய சிப்காட் வளாகத்தில் முதல் தொழில்சாலை இதுவாகும். 470 ஏக்கர் பரப்பளவில் ஆலையை அமைக்கும் டாடா நிறுவனம், ஜாகுவார், லேண்ட் ரோவர்களின் மின்சார கார்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த ஆலையில் ஆண்டுக்கு 2 லட்சம் கார்கள் உற்பத்தியாகும் என்று தெரிகிறது. அதில் மூன்றில் ஒரு பகுதி ஜாகுவார், லேண்ட் ரோவர் மின்சார கார்களாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலை அமைப்பதன் மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகள் உருவாகும். மேலும், 15,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் பெறலாம்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இன்றைய தினம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேம்பட்ட பயணிகள் வாகன உற்பத்தித் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியிருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாட்டில் உங்கள் தொழில் நிறுவனத்தை விரிவுபடுத்தும் அந்த பணிகளை பார்க்கும்போது, நீங்கள் எப்படி பெருமையாக நினைக்கிறீர்களோ, அதேபோல, டாடா குழுமம் தமிழ்நாட்டின் மீது நம்பிக்கை எந்த அளவுக்கு வைத்திருக்கிறீர்களோ, நாங்களும் அதற்காக பெருமைப்படுகிறோம். மகிழ்ச்சியடைகிறோம்.

”தமிழ்நாடுதான் நம்பர் ஒன்”

இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, உலகின் பெரிய நிறுவனங்களுக்கும் தமிழ்நாடுதான் முதல் முகவரியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. டாடா மோட்டார்ஸ் தன்னுடைய திட்டத்திற்காக, ராணிப்பேட்டை மாவட்டத்தை தேர்ந்தெடுத்தற்காக நான் முதலில் நன்றி சொல்கிறேன்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மொத்த மின் வாகனங்களில், 40 விழுக்காடு தமிழ்நாட்டில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. அதுமட்டுமல்ல, எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் நம்பர் ஒன். இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்தன்மை வாய்ந்தது.

Also Read: திமுக அரசை கண்டித்து அக்டோபர் 9 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..

பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமூகநீதியை உள்ளடக்கிய வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமத்துவம் போன்ற கொள்கைகள் அடித்தளமாக கொண்ட ஒட்டுமொத்த வளர்ச்சி என்பதால், தமிழ்நாடு மற்ற மாநிலங்களிலிருந்து சற்று தனித்து இன்றைக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

 

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?