PM Modi CM Stalin Meet: 30 நிமிடம்.. பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்.. என்ன பேசுனாங்க தெரியுமா?
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட வேண்டிய நிதியை வழங்கக் கோரி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் முன்வைத்தார். மெட்ரோ திட்டம், மீனவர்கள் கைது, கல்விக் கொள்கை போன்ற விவகாரங்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட வேண்டிய நிதியை வழங்கக் கோரி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்று மாலை 5.10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்று இரவு 8.15 மணிக்கு டெல்லி சென்ற அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்த பேசினார். தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட வேண்டிய நிதியை வழங்கக் கோரி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் முன்வைத்தார்.
என்னென்ன கோரிக்கைகள்?
தமிழக அரசுக்கு மத்திய அரசுக்கு கடந்த வாரங்களாக சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. இரண்டு விஷியங்களில் நிதி தொடர்பான சலசலப்புகள் தொடர்ந்து வருகிறது. ஒன்று சமக்ரசிக்ஷா அபியான், மற்றொன்று சென்னை மெட்ரோ ரயில் திட்டம். இதில் சமர்க்ரசிக்ஷா என்பது முழுமையான கல்வித்திட்டம் என பொருள்.
இந்த திட்டத்தின் கீழ் சர்வசிக்ஷா அபியான், ராஷ்டிரிய மத்யமிக் சிக்ஷா, ஆசிரியர் கல்வி திட்டம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதற்கான நிதியை மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிர்ந்து வருகிறது. ஆனால் தமிழகத்திற்கு நடப்பாண்டிற்கான நிதியை இன்னும் வழங்கவில்லை.
Also Read: அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் அலர்ட்!
இதுபற்றி பள்ளிக்கல்வித்துறை மூலம் கேட்கையில், புதிய கல்வி கொள்கையை முன்னிறுத்துவதாக குற்றம்சாட்டுகின்றனர். இதை ஏற்றுக் கொண்டால் தான் நிதியை விடுவிப்போம் என்று கறார் காட்டுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Had a cordial meeting with Hon’ble Prime Minister Thiru. @narendramodi, where I discussed key issues concerning Tamil Nadu:
🚆 Requested the release of the Union Government’s share for Phase 2 of the jointly implemented Chennai Metro, noting that several states which initiated… pic.twitter.com/wSoIjzN9bN
— M.K.Stalin (@mkstalin) September 27, 2024
அடுத்தாக சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு அதற்கு நிதி பங்களிப்பை விடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு பலமுறை கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. ஆனால், இதற்கு மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று தெரிகிறது. நிதி பிரச்னையால் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. எனவே, தாமதமின்றி இந்த நிதியை உடனடியாக வழங்கப்படவேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக இந்த இரண்டு திட்டங்களுக்கு நிதி கோர தான் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடி சந்தித்து பேசியிருக்கிறார்.
மீனவர்கள் பிரச்னை:
தமிழக மீனவர்கள் கைது தொடர்பாகவும் பிரதமர் மோடியுடன் பேசியதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி, “தமிழ்நாட்டு மீனவர்கள் சந்தித்து வருகின்ற வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்து எடுத்துச் சொல்லியிருக்கிறோம். தெளிவாக சொல்லியிருக்கிறோம். நம்முடைய பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில், மீன் பிடிக்கப் போகும் நம்முடைய மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்து துன்புறுத்துகிறார்கள்.
இதுபற்றி மாண்புமிகு பிரதமரிடமும், வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் நான் பலமுறை வலியுறுத்தியும், கடிதம் எழுதியும், இந்தச் சம்பவங்கள் தொடர்ந்து அது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் மிக அதிக அளவு எண்ணிக்கையில், இதுமாதிரியான சம்பவங்கள் நடக்கிறது.
Also Read: லாரிக்குள் இருந்த கார்.. கட்டுக்கட்டாக பணம்.. கொள்ளையர்களை சுட்டுப்பிடித்த போலீசார்.. பரபர சம்பவம்!
191 மீன்பிடிப் படகுகளும், 145 மீனவர்களும் தற்போது இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, உடனடியாக நம்முடைய ஒன்றிய அரசு, இலங்கை அரசை வலியுறுத்தி, இந்த மீனவர்களையும், அவர்களுடைய மீன்பிடிப் படகுகளையும் மீன்பிடிக் கருவிகளையும் உடனடியாக விடுவித்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்” என்று தெரிவித்தார்.