சுடச்சுட பிரியாணி.. தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறி அவர்களோடு சேர்ந்து சாப்பிட்ட முதல்வர்! - Tamil News | Tamil Nadu CM tastes biryani with sanitation workers in a thanks giving note for their tireless work in chennai | TV9 Tamil

சுடச்சுட பிரியாணி.. தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறி அவர்களோடு சேர்ந்து சாப்பிட்ட முதல்வர்!

சென்னையில் மழை நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்நது முதலமைச்சர் ஸ்டாலின் உணவு சாப்பிட்டுள்ளார். மேலும், தூய்மை பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சுடச்சுட பிரியாணி.. தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறி அவர்களோடு சேர்ந்து சாப்பிட்ட முதல்வர்!

முதல்வர் ஸ்டாலின்

Updated On: 

17 Oct 2024 14:57 PM

சென்னையில் மழை நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்நது முதலமைச்சர் ஸ்டாலின் உணவு சாப்பிட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு மாவட்ங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்ததது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. மழை, வெள்ளம் என ஒரு பக்கம் இருந்தாலும் மீட்பு பணிகளில் தூய்மை பணியாளர்கள் பலரும் ஈடுபட்டனர். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு சென்னையில் 21,000 பணியாளர்கள் சுழற்சி முறையில் 15 மணிடலங்களில் பணி செய்தனர்.

மீட்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்

அதேநேரம் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் சார்பில் 2,149 பணியாளர்கள், மின்சாரியம் சார்பாக 5000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.   இவர்களின் சிறப்பான பணிக்கு முதல்வர் ஸ்டாலினும் பாராட்டினார்.

அதாவது, “கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல் – நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள்! அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்” என்று எக்ஸ் தளத்தில் கூறினார்.

நேற்று முன்தினம் கூட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சென்னையில் புளியந்தோப்பு பகுதியில் மழைநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 15க்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களை பாராட்டினார்.

Also Read: வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு கடத்திக்கொண்டுவரப்பட்ட அரிய வகை வனவிலங்குகள்.. தட்டித்தூக்கிய சுங்கத்துறை அதிகாரிகள்..

தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறிய முதல்வர்

அவர்களை அருகில் இருக்கும் தேநீர் கடைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு டீ வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்தினார். இப்படியான சூழலில், இன்று  சென்னையில் மழை நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்நது முதலமைச்சர் ஸ்டாலின் உணவு சாப்பிட்டுள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.  இதையடுத்து, ஜம்புலிங்க மெயின்ரோட்டில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்று தூய்மை பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சென்னை வெள்ள பாதிப்பில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களை பாராட்டினார். இதைத் தொடர்ந்து, தூய்மை பணியாளர்களுக்கு சுடச்சுட பிரியாணி, மீன் வறுவல், சிக்கல் பீஸ் ஆகியவற்றை பரிமாறினார். தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரியாணி சாப்பிட்டார்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் ஸ்டாலின், “எந்த மழை வந்தாலும் சமாளிக்க இந்த அரசு தயாராக உளளது. மாநகராட்சி ஊழியர்களின் பணிகள் மிகச் சிறப்பாக பாராட்டக்கூடிய அளவிற்கு இருந்துள்ளது. இதற்காக மாநகராட்சி அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, அவர்களது ஊழியர்களுக்கு தூய்மை பணியாளர்களுக்கும், மற்றத்துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

Also Read: நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னைக்கு எப்படி?

மழை முன்னெச்சரிக்கைக்கு அரசு எடுத்த நடவடிக்கையை மக்கள் பாராட்டுகிறார்கள். பாராட்டை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். அதை பற்றி எனக்கு கவலையில்லை. எங்கள் பணி மக்கள் பணி. அரசின் நடவடிக்கைகள் பற்றி ஊடகங்களுக்கு தெரியுதோ இல்லையோ மக்களுக்கு நல்லா தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏன் வயிற்று உப்பசம் ஏற்படுது தெரியுமா?
தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...
நடிகை மடோனாவின் நியூ ஆல்பம்..!
இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாரு தெரியுமா..?