5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

விஜய்யை மறைமுகமாக விமர்சித்த துணை முதலமைச்சர்.. சொன்னது என்ன?

திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பல பேர் கிளம்பி இருக்கிறார்கள் தி.மு.க வை அழிப்பேன் என்று அவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை. நம்முடைய தொடர் வெற்றி தான் எதிர் அணியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என தமிழக வெற்றிக் கழகத்தை மறைமுகமாக சாடியுள்ளார்.

விஜய்யை மறைமுகமாக விமர்சித்த துணை முதலமைச்சர்.. சொன்னது என்ன?
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 07 Nov 2024 18:12 PM

தஞ்சையில் இன்று பூதலூர் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் கல்லணை செல்லக்கண்ணு இல்ல திருமண விழா நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்து முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்பார் என்றும் 7வது முறையாக திமுக ஆட்சி அமைத்தது என்ற சாதனை படைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் குறித்தும் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பல பேர் கிளம்பி இருக்கிறார்கள் தி.மு.க வை அழிப்பேன் என்று அவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை. நம்முடைய தொடர் வெற்றி தான் எதிர் அணியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என தமிழக வெற்றிக் கழகத்தை மறைமுகமாக சாடியுள்ளார்.

விஜய்யை மறைமுகமாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்:

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கல்லணை காத்தான் இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் தமிழக துணை முதலமைச்சர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், “ இன்று பல பேர் கிளம்பி இருக்கிறார்கள். தி.மு.க வை அழைப்பேன் என்று. அதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழக மக்கள் அதற்கான பதிலடி கொடுப்பார்கள்.

மேலும் படிக்க: நிலையான வைப்புநிதி திட்டத்தில் இந்த தொகைக்கு மேல் முதலீடு செய்யாதீர்கள்.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தி.மு.க தொண்டர்கள் சந்தோஷமாக – உற்சாகமாக இருக்கின்றார்கள். இந்த உற்சாகம் தான் எதிரணியினருக்கு மிகுந்த எரிச்சலை தருகிறது. தமிழக முதல்வர் தலைமையில் நாம் பெருகின்ற தொடர் வெற்றி தான் அவர்களுக்கு மிகப்பெரிய எரிச்சலைத் தருகின்றது. பல்வேறு அணிகளாக பிரிந்து கிடைக்கும் அ.தி.மு.க வும் – யாருமே சீண்டாத பா.ஜ.க வும் எப்படியாவது தி.மு.க வில் ஒரு விரிசல் விழுந்துடாதா என துண்டு போட்டு காத்திருக்கிறார்கள்.

2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு:

ஆக நாம் நம்முடைய பணிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இன்னும் ஒன்றரை வருடங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. தலைவர் 200 தொகுதியில் நாம் வெற்றி பெற வேண்டும் என இலக்கு கொடுத்துள்ளார். இலக்கை நோக்கி நாம் அனைவரும் ஒன்றாக உழைக்க வேண்டும். 2026 இல் கழகம் மீண்டும் ஆட்சி அமைத்து, தலைவர் இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆவார். திராவிட முன்னேற்ற கழகம் ஏழாவது முறையாக ஆட்சி அமைத்தது என்ற வரலாற்று சாதனையை உருவாக்க வேண்டும். அதற்கான உறுதியை இந்த தஞ்சை மண்ணில் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க: கொடநாடு வழக்கு.. எடப்பாடி பழனிசாமிக்கு நஷ்ட ஈடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

த.வெ.க மாநாட்டில் விஜய் சொன்னது என்ன?

கடந்த மாதம் 27 ஆம் தேதி மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இருக்கும் வி.சாலையில் நடைபெற்றது. அப்போது அக்கட்சி தலைவர் விஜய் கட்சி கொள்கைகள் மற்றும் தீர்மானங்களை எடுத்துரைத்தார். குறிப்பாக தமிழகத்தில் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தை நேரடியாக விமர்சித்து பேசினார். குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து ஆளும் கட்சி தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

 

Latest News