5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamil Nadu Election Result 2024 : 40 தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக கூட்டணி.. மக்களவைத் தேர்தல் முழு விவரம்!

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் முடிவுகள்: 2014ஆம் மக்களவைத் தேர்தலில் அதிமுக 37 இடங்களை கைப்பற்றியது. 2019ல் நடந்த தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியது. திமுக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றியது. அதிமுக ஒரு இடத்தில் மட்டும் வாகை சூடியது. அதாவது தேனி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் வெற்றி பெற்றார். இந்த நிலையில் 2024 தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.  

Tamil Nadu Election Result 2024 : 40 தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக கூட்டணி.. மக்களவைத் தேர்தல் முழு விவரம்!
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் முடிவுகள்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 04 Jun 2024 19:01 PM

திமுக கூட்டணி அபார வெற்றி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு புதுவையில் மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனைப்போட்டி நிலவியது. அதாவது, திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும், பாஜக தலைமையில் 3வது அணியும், நாம் தமிழர் தனித்து களம் கண்டது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கொங்கு நாடு மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம், தேமுதிக, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் உள்ளன. பாஜக கூட்டணியில் ஐஜெகே, புதிய நீதிக் கட்சி, தமுமுக, பாமக, தாமாகா, அமமுக கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில், திமுக கூட்டணியில் முன்னிலையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் திமுக கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. இதில் திமுகவின் அனைத்து மாவட்டங்களிலும் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுகவும், பாஜகவும் ஒரு தொகுதி கூட கைப்பற்றவில்லை.  இந்த இரண்டு கட்சிகளும் படுதோல்வியை சந்தித்தன. முன்னதாக, தருமபுரி தொகுதியில் பாமகவின் சவுமியா அன்புமணிக்கும், திமுகவின் மணிக்கும் கடும் போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் சவுமியா அன்புமணி முன்னிலை பெற்று வந்தார். அதன்பின், சவுமியா வெற்றி வாய்ப்பை இழந்தார். திமுகவின் மணி 4 லட்சத்து 26 ஆயிரத்து 735 வாக்குகள் பெற்று பெற்றி பெற்றார்.  மேலும் பாமகவுன் சவுமியா அன்புமணி 4,07,370 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். சுமார் 19,365 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றி பெற்றார் சவுமியா அன்புமணி.  அதேபோல, கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட  நெல்லை தொகுதியில்  திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸின் ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றார்.

தமிழ்நாடு புதுச்சேரியில் 10 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களும், கூட்டணி வேட்பாளர்களும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர். தருமபுரி சவுமியா அன்புமணி, நீலகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன், மத்திய சென்னையில் வினோஜ் பி செல்வம், தென் சென்னையில் தமிழிசை சௌந்தரராஜன், கோவையில் அண்ணாமலை, கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம், நெல்லையில் நயினார் நாகேந்திரன், வேலூரில் ஏசி சண்முகம், தேனியில் டிடிவி தினகரன், புதுச்சேரியில் நமசிவாயம் ஆகியோர் இரண்டாம் இடத்தையும் பெற்றிருக்கின்றனர். இதனால், தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மூன்று மற்றும் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக 2014ஆம் மக்களவைத் தேர்தலில் அதிமுக 37 இடங்களை கைப்பற்றியது. 2019ல் நடந்த தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியது. திமுக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றியது. அதிமுக ஒரு இடத்தில் மட்டும் வாகை சூடியது. அதாவது தேனி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் வெற்றி பெற்றார். இந்த நிலையில் 2024 தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

Also Read: தருமபுரியில் சவுமியா அன்புமணி முன்னிலை.. தொடரும் கடும் போட்டி!

 

Latest News