நோட் பண்ணுங்க.. மின் கட்டணம் செலுத்துவதில் அதிரடி மாற்றம்.. குழப்பத்தில் பயனர்கள்!

EB Bill : மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையில் தமிழ்நாடு மின்வாரியம் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதாவது, மின் கட்டணத்தை ரூ.5000 வரை ரொக்கமாக செலுத்தி வந்த நிலையில், தற்போது ரூ.4,000-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

நோட் பண்ணுங்க.. மின் கட்டணம் செலுத்துவதில் அதிரடி மாற்றம்.. குழப்பத்தில் பயனர்கள்!

மின் கட்டணம்

Updated On: 

17 Dec 2024 08:35 AM

மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையில் தமிழ்நாடு மின்வாரியம் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதாவது, 4,000 ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் ரொக்கமாக செலுத்த முடியாது என்று தகவல் வெளியாகி உள்ளது. இது மின் நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மாநில முழுவதும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 3 கோடிக்கு அதிகமான மின் நுகர்வோர்கள் உள்ளன. இவர்கள் மாதம் இரண்டு முறை மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். நுகர்வோர்கள் பயன்படுத்தும் மின்சாரத்தை பொறுத்து இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தி வேண்டியிருக்கும். மின் கட்டணத்தை ஆன்லைன், வங்கிகள், தபால் நிலையம், மின்சார வாரிய அலுவலகங்கள் என மக்கள் செலுத்தி வருகின்றனர். இத்ந மின் கட்டணம் செலுத்துவதில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு செய்தது.

மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல்

அதன்படி அண்மையில் ரொக்கமாக ரூ. 5 ஆயிரம் வரை மட்டுமே செலுத்த வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டது. முனனதாக ரூ.10,000 வரை ரொக்கமாக செலுத்தி வந்த நிலையில், ரூ.5,000 ஆக குறைக்கப்பட்டது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.

இதனை அடுத்து, இரண்டு மாதத்திற்கு பிறகு ரூ.4,000 மேல் ரொக்கமாக செலுத்த கூடாது என்று உத்தரவிட்டது. இது மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துவதை ஊக்குவிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பண வரம்பு குறைக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது ரூ.4000 மேல் மின்கட்டணம் ரொக்கமாக தான் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு மின் ஊழியர்களின் மத்திய அமைப்பு (COTEE) பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் கூறியதாவது, “3 கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோர்கள் உள்ளனர். இவர்கள் வங்கி, தபால் அலுவலகம், இ-சேவா மையங்கள் மற்றும் ஆன்லைன் மூலம் மின்கட்டணத்தைச் செலுத்துகின்றனர்.

Also Read : பெற்றோர் கண்டிப்பு.. 10ஆம் வகுப்பு எடுத்த விபரீத முடிவு.. தஞ்சையில் அதிர்ச்சி!

ரூ.4000 வரை ரொக்கமாக கட்ட ஆணை

மேலும் பலர் ஆன்லைனில் செலுத்தி வருகின்றனர். எந்தவித முன் அறிவிப்புகளும் இல்லாமல், மின் கட்டணம் வசூல் முறையில் மாற்றங்களைச் செய்யப்பட்டது. இது நுகர்வோர் மத்தியில் அதர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு தொடக்கம் வரை, நுகர்வோர் 10,000 ரூபாய் வரை கவுன்டர்களில் பில் தொகையை ரொக்கமாக செலுத்த அனுமதிக்கப்பட்டது.

திடீரென்று, ரூ. 5,000 ஆக குறைக்கப்பட்டது. இப்போது ரூ.4,000 ஆக குறைக்கப்பட்டது. இதனால் இதனால் வாடிக்கையாளர்களுக்கும், கவுன்டர்களில் இருந்த ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது” என்றார். எனவே மின் கட்டணம் ரூ.5000 வரை ரொக்கமாக செலுத்தி வந்த நிலையில், தற்போது ரூ.4,000-ஆக குறைக்கப்பட்டது.

Also Read : சென்னைக்கு கடத்திய ரூ.1.7 கோடி தங்கம்.. சிக்கிய விமான ஊழியர்.. பரபர வாக்குமூலம்!

அதாவது, ரூ.4,000 வரை மட்டுமே ரொக்கமாக செலுத்த முடியும். ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வரவில்லை. இருப்பினும், மின் கட்டணம் செலுத்தும்போது நுகர்வோர்கள் சிரமத்திற்கு ஆளாகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

காலையில் அலாரம் வைத்து எழுந்திருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்..!
நடிகை ரித்திகா சிங் சினிமா பயணம்
கொய்யா பழத்தின் பல ஆரோக்கிய நன்மைகள்!
இந்தியாவின் தலைசிறந்த செஸ் வீரர்கள்!