5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Power Tariff Hike: மின் கட்டணம் உயர்வு.. எத்தனை யூனிட்டுக்கு எவ்வளவு அதிகம்.. முழு விவரம்!

Electricity Price Hike | தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Power Tariff Hike: மின் கட்டணம் உயர்வு.. எத்தனை யூனிட்டுக்கு எவ்வளவு அதிகம்.. முழு விவரம்!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 16 Jul 2024 09:48 AM

மின் கட்டணம் உயர்வு : தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்த விலையேற்றம் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வீடுகளுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணம்

  1. அதன்படி வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யுனிட் பயன்பாட்டாளர்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு யூனிட்டிற்கு ரூ.4.60 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு யூனிட்டிற்கு 20 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.80 ஆக உள்ளது.
  2. 401 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கனவே ஒரு யூனிட்டிற்கு ரூ.6.15 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒரு யூனிட்டிற்கு 30 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.6.45 ஆக உள்ளது.
  3. 501 முதல் 600 யூனிட் வரையில் ஒரு யூனிட்டிற்கு ரூ.8.15 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்த  நிலையில், தற்போது 40 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.8.55 ஆக உள்ளது.
  4. 601 முதல் 800 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கனவே ஒரு யூனிட் ரூ.10.20 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 50 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.10.70 ஆக உள்ளது.
  5. 1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கனவே ஒரு யூனிட்டுக்கு ரூ.11.25 காசுகள் வசூலிக்கப்பட்ட நிலையில், 55 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.11.80 ஆக உள்ளது.

வணிக வளாகங்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணம்

  • வணிக பயன்பாட்டை பொருத்த வரை 50 கிலோ வாட்டிற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.9.70 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 45 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு யூனிட் ரூ.10.15 ஆக உள்ளது.
  • வாடகைக்கு ஒரு கிலோ வாட்டிற்கு ஏற்கனவே ரூ.307 வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் ரூ.15 விலை உயர்த்தப்பட்டு ரூ.322 ஆக உள்ளது.
  • 112 கிலோ வாட்டிற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.562 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.589 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : PF Complaint : நீங்கள் பணிபுரியும் நிறுவனம் உங்களுக்கு பிஎஃப் பணம் செலுத்தவில்லையா.. அப்போ இத பண்ணுங்க!

அதுமட்டுமன்றி புதிதாக மின் இணைப்பு வாங்குபர்களுக்கும் மிக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News