4 மாவட்டங்களில் பிச்சு உதறபோகுது மழை.. சென்னைக்கும் கனமழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்
Tamil Nadu Rain Update: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரு நாட்களில் வலுப்பெற்று, தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை சில நாட்களில் முடியப்போகிறது. அக்டேபார் மாதத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகத்தை புரட்டிப்போட்டு விட்டது. தொடக்க நாட்களில் சரிவரி மழை பொழிவு இல்லை. அதன்பிறகு டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்தது. சமீபத்தில் கூட வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, ஃபெங்கல் புயலாக மாறியது. இந்த ஃபெங்கல் புயலால் தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்தது.
4 மாவட்டங்களுக்கு மிக கனமழை அலர்ட்
குறிப்பாக, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும், நெற்பயிர்கள் சேதம் அடைந்தது. மேலும், மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தற்போது இயல்பு நிலை திரும்பிவிட்ட நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவானது. இது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வலுவடைந்தது. இது வலுவடைந்த 24 மணி நேரத்திற்கு வங்கக் கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று வானிலை மையம் கணித்தது.
Also Read : வெளியூரில் கணவன்.. உள்ளூரில் இரு இளைஞர்கள்.. இளம்பெண் கொலையில் ட்விஸ்ட்!
அதன்படி, நேற்று காலை வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது என்று வானிலை மையம் தெரிவித்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை வெளுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளது.
Also Read : கோவை குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி பாஷா உயிரிழப்பு
நாளை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், நாளை மறுநாளும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.