கனமழை வெளுக்கப்போகுது… ஆரஞ்சு அலர்ட்.. லிஸ்டில் இருக்கும் மாவட்டங்கள் என்னென்ன?
Tamil Nadu Rains: தமிழகத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடக்க நாட்களில் சரிவர மழை பெய்யவில்லை. ஆனால் நவம்பர் இறுதிப் பகுதியில் இருந்து தான் ஓரளவு கனமழை பெய்யத் தொடங்கியது. இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வங்கக் கடலில் உருவான ஃபெங்கல் புயல், கடும் மழை பொழிவை கொடுத்தது. குறிப்பாக கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையை சந்தித்தன. இங்கு 50 செ.மீ மேல் மழை கொட்டியது. அதனால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்த புயல் கடந்த சென்ற நிலையில் வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதுவும் தமிழக கரையை நோக்கி வந்தது. இதன் காரணமாக சென்னை தொடங்கிய கன்னியாகுமரி மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக, நாகை, திருவாரூர், தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து 2 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்தது.
அதனால் இந்த பகுதிகளில் ஏராளமான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இப்படிப்பட்ட நிலையில், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்த இரு தினங்களில் தமிழகத்தை நோக்கி நகரும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
அதாவது, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை மையம் கூறியது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
Also Read : போதும் பா சாமி! ஆதவ் அர்ஜூனா எடுத்த முடிவு.. விசிகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!
தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்
இதன் காரணமாக தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பல இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக டிசம்பர்16, 17,18 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு தொடங்கி ராமநாதபுரம் வரையிலான கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும், டெல்டா பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளத. இந்த புயல் சின்னம் படிப்படியாக வலுப்பெற்று புயலாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாளை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : திமுக, பாஜகவிற்கு கண்டனம்.. அதிமுக செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
குறிப்பாக நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது