CM MK Stalin : வானிலை கணிப்புகளை விட அதிக அளவு பெய்த மழை.. புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்!
Fengal Cyclone | தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அப்படியே கடந்த நவம்பர் 27 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் மிக கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வானிலை கணிப்புகளை விட அதிக அளவு மழை பெய்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முறையாக மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : ISRO : கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிரச்னை.. தடுத்து நிறுத்தப்பட்ட ராக்கெட்.. இஸ்ரோவில் பரபரப்பு சம்பவம்!
தமிழகத்தை கடுமையாக தாக்கிய ஃபெஞ்சல் புயல்
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அப்படியே கடந்த நவம்பர் 27 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி அது புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு வானிலை ஆய்வு மையம் ஃபெஞ்சில் என பெயரிட்டு தீவிரமாக கண்காணித்து வந்தது. இந்த புயல் மிக தீவிரமாக இருக்கும் என்றும், சென்னையில் கரையை கடக்கும் என்பதால் சென்னைக்கு கடும் பாதிப்புகள் ஏற்படும் என கூறப்பட்டது. அதுமட்டுமன்றி, சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் திண்டிவனம் மற்றும் மரக்காணம் இடையே கடந்த நவம்பர் 30 ஆம் தேதி கரையை கடந்ததால், வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதையும் படிங்க : Kerala : திருமணத்தை மீறிய உறவு.. ஆண் நண்பருடன் காரில் வைத்து மனைவியை எரித்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்!
புயல் நடவடிக்கையில் அரசு மீது குற்றம்சாட்டும் கட்சிகள்
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின் படி, விறுவிறுப்பாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆளும் அரசு புயல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என்று பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக அரசு பொதுமக்களை கைவிட்டு விட்டதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இதேபோல அதிமுக பொதுச் செயலாளர் எடப்படி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.
இதையும் படிங்க : Tiruchendur | திருச்செந்தூரில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால கல்வெட்டுகள்.. அதில் இருக்கும் தகவல்கள் கூறுவது என்ன?
விமர்சனங்களுக்கு முதலமைச்சர் பதில்
இவ்வாறு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் புயல் பாதிப்புகள் குறித்து தமிழக அரசு மீது குற்றம்சாட்டி வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவற்றுக்கு விளக்கமளித்துள்ளார். வடசென்னையில் வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்து உரையாடிய முதலமைச்சர், வானிலை கணிப்புகளை விட மிக அதிக அளவு மழை பெய்ததால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.