Special Bus: ஆயுதபூஜை விடுமுறை நாட்கள்.. அரசு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!
விடுமுறை நாட்களை வெளியூரில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாட தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஆயுத பூஜை மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் வார விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 9 மற்றும் 10ஆம் தேதியில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து கூடுதல் ஆக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள்: இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியுள்ளது. அதன்படி முதல் பண்டிகையாக நவராத்திரி விழா தொடங்கியுள்ளது. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் இறுதி நாட்கள் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி அக்டோபர் 11 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும், அக்டோபர் 12 ஆம் தேதி விஜயதசமியும் வருகிறது. இந்த நாட்கள் இந்தியா முழுவதும் பொது விடுமுறை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இப்படியான நிலையில் இந்த விடுமுறை நாட்களை வெளியூரில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாட தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஆயுத பூஜை மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் வார விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 9 மற்றும் 10ஆம் தேதியில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து கூடுதல் ஆக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
Also Read: Chennai Powercut: சென்னையில் அக்டோபர் 5ல் எங்கெல்லாம் மின்தடை.. முழு விபரம்!
இது தொடர்பான அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன், மேலே குறிப்பிடப்பட்ட இந்த விடுமுறை தினங்களுக்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, கும்பகோணம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், தூத்துக்குடி, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய ஊர்களுக்கு அக்டோபர் 9 ஆம் தேதி மற்றும் 10ஆம் தேதி 880 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, ஓசூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் ஆகிய ஊர்களுக்கு அக்டோபர் 9 ஆம் தேதி 35 பேருந்துகளும், அக்டோபர் 10 ஆம் தேதி 265 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெங்களூர், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாதவரத்தில் இருந்து மேற்குறிப்பிட்ட நாட்களில் 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
Also Read: PM Internship scheme: ரூ.60 ஆயிரம் ஊக்கத்தொகை.. PM இன்டர்ன்ஷிப் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி?
அதேபோல் அக்டோபர் 13ஆம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த அரசு பேருந்துகளில் பயணிக்க அக்டோபர் 9 ஆம் தேதி 6,582 பயணிகளும், அக்டோபர் 10ஆம் தேதி 22, 236 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல் அக்டோபர் 13-ஆம் தேதி 21, 311 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் www.tnstc.in மற்றும் TNSTC மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதே சமயம் சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் சொந்த ஊர் செல்லும் முடிவில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பேருந்து மற்றும் ரயில்கள் மிக முக்கிய போக்குவரத்து சாதனங்களாக திகழ்ந்து வருகிறது. இதில் தெற்கு ரயில்வேயால் இயக்கப்படும் ரயில்களில் அனைத்து வகுப்புகளுக்குமான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதால் பொதுமக்கள் அடுத்த கட்டமாக பேருந்துகளை நாடி வருகின்றனர். இதில் தனியார் பேருந்துகள் விடுமுறை நாட்களையும் மக்களின் தேவைகளையும் சாதகமாக்கி அதிக அளவில் கட்டணங்கள் வசூலிக்கிறது. இதனால் மக்கள் அரசு பேருந்துகளை நாடி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு வார விடுமுறை, சுப முகூர்த்த நாட்கள், முக்கிய விசேஷ தினங்கள், வழிபாட்டுத்தலங்களின் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் போது கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு இயக்கும் பேருந்துகளில் தனியார் பேருந்துகளுக்கு இணையான வசதிகள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.