Special Train : தீபாவளி முடிந்து சென்னை திரும்புவோருக்கு குட் நியூஸ்.. அரசு அதிரடி அறிவிப்பு!
Diwali | நாடு முழுவதும் நேற்று (அக்டோபர் 31)தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி கொண்டாட்டத்திற்கு கடந்த ஒரு மாதங்களாகவே மக்கள் தயாராகி வந்த நிலையில், துணிக்கடைகள், இனிப்பு கடைகள் என அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் மிகுதியாக காணப்பட்டது.
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், சொந்த ஊருக்கு சென்றுள்ள பொதுமக்கள் சென்னை திரும்பும்போது, கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்க சிறப்பு ரயில்கள இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னைக்கு திரும்பும் பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி பயணிக்க முடியும் என்றும், போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதியும் படிங்க : Gas Cylinder Price : அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா?
கோலாகலமாக கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை
நாடு முழுவதும் நேற்று (அக்டோபர் 31)தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி கொண்டாட்டத்திற்கு கடந்த ஒரு மாதங்களாகவே மக்கள் தயாராகி வந்த நிலையில், துணிக்கடைகள், இனிப்பு கடைகள் என அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் மிகுதியாக காணப்பட்டது. அதுமட்டுமன்றி பட்டாசு விற்பனையும் கலைக்கட்டியது. இவ்வாறு பொதுமக்கள் ஒரு மாத காலமாக பண்டிகைக்கு தயாரான நிலையில், நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்து, இனிப்புகளை வழங்கி பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டனர்.
இதையும் படிங்க : CSK Retention List IPL 2025: ரச்சின், கான்வே அவுட்.. முக்கிய வீரர்களை வெளியேற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ்..!
சிறப்பு ரயில் சேவை
பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும்போது தீ காயம் எதுவும் ஏற்பட்டுவிடாமல் இருக்க அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படிருந்தன. அதுமட்டுமன்றி அவசர மருத்துவ சிகிச்சை சேவைகளும் வழங்கப்பட்ட. நேற்றைய தினம் மட்டுமன்றி, பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாட கடந்த ஒரு மாத காலமாகவே அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக, பொதுமக்கள் கூட்ட நெரிசல் இன்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிலையில், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது மட்டுமன்றி அவர்கள் சென்னைக்கு திரும்பும்போதும் எந்த வித பிரச்னைகளும் இன்றி திரும்ப வேண்டும் என்பதற்காக சிறப்பு ரயில் சேவையை அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : FD Interest Rate : 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. தனியார் வங்கிகளின் அக்டோபர் மாத வட்டி விகிதம்!
சொந்த ஊர்களுக்கு பயணம் செய்த மக்கள்
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். அதன்படி, கடந்த அக்டோபர் 28,29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து சுமார் 5.25 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 தேதிகளில் பொதுமக்கள் பயணிப்பதற்காக 4,876 சிறப்பு பேருந்துகளுடன் சுமார் 8,284 பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தகது.
இதையும் படிங்க : Diwali Celebration : எல்லையில் தீபாவளி கொண்டாட்டம்.. சீன ராணுவத்தினருக்கு இனிப்பு வழங்கிய இந்திய வீரர்கள்!
சென்னை திரும்புபவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
தீபாவளி பண்டிகைக்கு பள்ளி, கல்லூரிகள் மற்றும் சில நிறுவனங்களுக்கு நவம்பர் 3 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 4 ஆம் பொதுமக்கள் சென்னைக்கு திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 4 ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கத்திற்கு வரும் பயனிகளுக்கு காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.