Formula 4 Chennai: இரண்டு நாட்கள் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயம்.. 8000 பேர் அனுமதி.. - Tamil News | Tamil Nadu government decides to conduct formula 4 racing with 5 rounds from 31 aug to 1st sep tamil news | TV9 Tamil

Formula 4 Chennai: இரண்டு நாட்கள் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயம்.. 8000 பேர் அனுமதி..

Updated On: 

24 Aug 2024 17:33 PM

இந்த நிலையில், பார்முலா 4 கார் பந்தயத்திற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் கார் பந்தியத்திற்கான ஏற்பாடுகள் பாதுகாப்பு அம்சங்கள் வீரர்களுக்கான ஏற்பாடுகள் பார்வையாளர்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு பல்வேறு அறிவுரைகள் வழங்கபட்டு  உள்ளது.

Formula 4 Chennai: இரண்டு நாட்கள் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயம்.. 8000 பேர் அனுமதி..

கோப்பு புகைப்படம்

Follow Us On

ஃபார்முலா 4 ரேசிங்: கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த கார் பந்தயம் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியிருக்கும் 3.5 கி.மீ. சுற்றளவு சாலைகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் நடைபெற உள்ளது. ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயமாக ஃபார்முலா-4 பந்தயம், சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு கொண்ட சாலையில் இரவு நேர போட்டியாக நடத்தப்பட உள்ளது. அதன்படி, தீவுத்திடலில் தொடங்கும் கார் பந்தயமானது அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலை சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பார்முலா 4 கார் பந்தயத்திற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் கார் பந்தியத்திற்கான ஏற்பாடுகள் பாதுகாப்பு அம்சங்கள் வீரர்களுக்கான ஏற்பாடுகள் பார்வையாளர்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு பல்வேறு அறிவுரைகள் வழங்கபட்டு  உள்ளது.

இந்த கூட்டத்தில் விளையாட்டுத்துறை செயலாளர், விளையாட்டுத்துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி, காவல்துறை உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ” சென்னையில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடர்பான ஆய்வு கூட்டம் தலைமைச் செயலாளர் தலைமையில் நடத்தப்பட்டது. பெருநகர போக்குவரத்து காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

மேலும் படிக்க: வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட Rhumi-1 ஹைப்ரிட் ராக்கெட்.. பயன்பாடுகள் என்ன?

இந்த பந்தயத்தை 8000 பேர் வரை நேரில் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம். சனிக்கிழமை பிற்பகலுக்கு பிறகு, தகுதி சுற்று போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இரவு 10:30 வரை போட்டிகள் நடத்தப்படவுள்ளது. போக்குவரத்திற்கு எந்த வித இடையூறும் இல்லாமல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
Exit mobile version