ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வெளியான சூப்பர் நியூஸ்.. ரூ. 320 கோடி நிதி ஒதுக்கீடு.. - Tamil News | tamil nadu government has alloted rupees 372 crores fund for retired transport employees for various benefits | TV9 Tamil

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வெளியான சூப்பர் நியூஸ்.. ரூ. 320 கோடி நிதி ஒதுக்கீடு..

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்காக வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ.372.06 கோடி வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வெளியான சூப்பர் நியூஸ்.. ரூ. 320 கோடி நிதி ஒதுக்கீடு..

கோப்பு புகைப்படம்

Published: 

28 Oct 2024 14:44 PM

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் 1279 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ.372.06 கோடி வழங்கிட நிதி ஒதுக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இது இருந்து வந்தது. இந்நிலையில் அதற்காக தமிழ்நாடு அரசு தரப்பில் சுமார் ரூ.372 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள்:

இது தொடர்பாக போக்குவரத்து துறை தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த ஏப்ரல் 2022 முதல் நவம்பர் 2022 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் இறந்த பணியாளர்கள் என மொத்தம் 3414 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.1031.31 கோடி வழங்கிட 29/03/2023 அன்று உத்தரவிட்டார்கள்.

மேலும் படிக்க: அஞ்சலக சேமிப்பு திட்டம்.. மாதம் ரூ.2,000 முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்?

அதன்படி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த ஏப்ரல்-2022 முதல் நவம்பர்-2022 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்கள் என மொத்தம் 3414 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.1031.31 கோடி வழங்கப்பட்டது.

மேலும் படிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2024 தேர்வு முடிவுகள் வெளியானது.. இணையதளம் மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்வது எப்படி?

ரூ.372 கோடி நிதி ஒதுக்கீடு:

இதனை தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கடும் நிதி நெருக்கடியிலும், தொழிலாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கருணை உள்ளத்தோடு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் 1279 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.372.06 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக்கொள்கிறேம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிப்பட்ட வளர்ச்சிக்கு தேவையான முக்கிய விஷயங்கள்!
சகோதரியிடம் உடன்பிறப்புகள் கற்றுக்கொள்ளும் முக்கிய விஷயங்கள்!
உடல் உழைப்பு இல்லையா.. அப்போ இந்த பிரச்சனை வர வாய்ப்புள்ளது.
உப்பு அதிகம சாப்பிடுவீங்களா? அப்போ இந்த பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது