5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்த தமிழக அரசு.. உயிரிழப்பு ஏற்படும் நிலையில் நிவாரணம் அறிவிப்பு..

தற்போது தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. அக்டோபர் மாதம் முதல் வட தமிழகத்தில் மழை தொடங்கும் ஆனால் இந்த ஆண்டு தற்போது வரை மழைக்கான அறிகுறியே இல்லாமல் இருக்கிறது. வெப்பநிலையில் ஒரு சில இடங்களில் 35 டிகிரி செல்சியஸ் நெருங்கி பதிவாகிறது. இப்படி தமிழ்நாட்டில் காலநிலை மாற்றங்களால் குழப்பமான வானிலை நிலவுகிறது.

வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்த தமிழக அரசு.. உயிரிழப்பு ஏற்படும் நிலையில் நிவாரணம் அறிவிப்பு..
கோப்ப்ய் புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 28 Oct 2024 19:57 PM

வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்த தமிழ்நாடு அரசு அதனை அரசிதழில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் வெப்ப அலையால் உயிரிழப்பவர்களுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.4 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை கணிக்க முடியாத நிலையில் உள்ளது. மழைக்காலத்தில் அதிகப்படியான வெயிலும், வெயில் காலத்தில் மழையும், பனி காலத்தில் உறைப்பனியும் சந்தித்து வருகிறோம். வானிலை ஆய்வாளர்கள் கூட கணிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு முழு முதல் காரணம் காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் தான். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம்:

தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த ஆண்டு கத்திரி வெயிலின் போது நல்ல மழை பதிவானது. வழக்கமாக மே, ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். சுமார் 40 டிகிரி செல்சியஸ் கடந்து பதிவாகும் ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் 40 டிகிரி செல்சியஸ் கடந்து பதிவானது. ஒரு சில இடங்களில் 42 டிகிரி வரை பதிவானது. தென் மேற்கு பருவமழையின் போது தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் நல்ல மழை பதிவானது.

மேலும் படிக்க: ” ஆட்சியில் பங்கு வேண்டும்” – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கடிதம்.. விஜய் சொன்னதன் விளைவா?

தற்போது தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. அக்டோபர் மாதம் முதல் வட தமிழகத்தில் மழை தொடங்கும் ஆனால் இந்த ஆண்டு தற்போது வரை மழைக்கான அறிகுறியே இல்லாமல் இருக்கிறது. வெப்பநிலையில் ஒரு சில இடங்களில் 35 டிகிரி செல்சியஸ் நெருங்கி பதிவாகிறது. இப்படி தமிழ்நாட்டில் காலநிலை மாற்றங்களால் குழப்பமான வானிலை நிலவுகிறது.

மாநில பேரிடர்:

இதன் காரணமாக தற்போது தமிழ்நாடு அரசு வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்துள்ளது. வெப்ப அலையால் மரணம் அடைபவர்களுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும், வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள் மற்றும் ஓஆர்எஸ் கரைசல் வழங்குவதற்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெப்ப அலை தாக்கத்தின் போது தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர் வழங்குவதற்கும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கைகள் இல்லை.. தன்னம்பிக்கை மட்டும்தான்.. இணையத்தை வியப்புக்குள்ளாக்கிய சோமேட்டோ ஊழியரின் வீடியோ!

இதனை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில், “ பருவ நிலைமாற்றம் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தின் முதல் இரண்டு வாரத்தில் பெரும்பான்மையான இடங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலைவீச்சும் நிலவியது. வெப்ப அலையிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க பொது இடங்களில் தண்ணீர்பந்தல் அமைப்பது, ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகள் வழங்குவது, திறந்தவெளியில் பணியாற்றும் தொழிலாளர்களது நலன் கருதி பணி நேரத்தை மாற்றி அமைப்பது. வெப்பஅலையின் காரணமாக ஏற்படும் உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டது. எனவே, மாநில பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளின்படி, வெப்ப அலை பாதிப்பிற்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும், உரிய நிவாரணம் வழங்கவும் வெப்ப அலை வீச்சினை மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவிக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Latest News