TN Goverment: பெண்களுக்கு அள்ளி தரும் தமிழக அரசு.. ரூ.5 லட்சம் மானியம்… உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழக அரசு எழை, நடுத்தர மக்களுக்கு ஏற்றவாறு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்து அளித்து பல்வேறு திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ஒரு புதிய திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

TN Goverment: பெண்களுக்கு அள்ளி தரும் தமிழக அரசு.. ரூ.5 லட்சம் மானியம்... உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழக அரசு

Updated On: 

24 Sep 2024 15:53 PM

நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டம் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துளள்து. தமிழக அரசு எழை, நடுத்தர மக்களுக்கு ஏற்றவாறு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்து அளித்து பல்வேறு திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அதாவது, பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், தாலிக்கு தங்கம் திட்டம், புதுமை பெண் திட்டம், மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் போன்று எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

பெண்களுக்கு அள்ளி தரும் தமிழக அரசு

இந்த நிலையில், தற்போது ஒரு புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் மானியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்கள் சொந்தமாக நிலம் வாங்கு முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனால், இந்த திட்டத்தின் மூலம் யாரெல்லாம் பயன் பெறலாம் என்ற விவரங்களை பார்ப்போம்.

Also Read: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள்?

யாரெல்லாம் பயன் பெறலாம்?

இந்தி திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் என்த விவசாய நிலத்தையும் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் தொழில் விவசாயமாக இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நிபந்தனைகள் என்னென்ன?

நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். விண்ணப்பதாரர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்க உத்தேசித்துள்ள உறுதி செய்யதுள்ள நிலம் 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்குள் இருக்கலாம்.

நிலத்தின் விலை சந்தை மதிப்பீட்டின்படி நிர்ணயிக்கப்படும். பயனாளிகள் இந்திய ஓவர்சீஸ் வங்கியின் மூலம் கடனாக பெற்று நிலம் வாங்கலாம். வாங்கிய நிலம் பத்து ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக்கூடாது. முத்திரை நாள் மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் கீழ் மானியத்துடன் விவசாய நிலம் வாங்க விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்கள், மாவட்டம் தோறும் செயல்பட்டு வரும் தாட்கோ மாவட்ட மேலாளரை அணுக வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Also Read: ஏமாற்றம் இருக்காது, மாற்றம் இருக்கும்.. துணை முதலமைச்சர் குறித்த கேள்விக்கு மு.க.ஸ்டாலி பதில்!

இந்த திட்டத்திற்கான விண்ணப்ப விநியோகம் அனைத்து மாவட்டங்களில் தொடங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ மூலம் கடன் உதவு பெற விண்ணப்பிக்க வேண்டும். https://tahdco.com/ என்ற இணையதளம் மூலம் பெண்கள் விண்ணப்பிக் வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!