Udhayanidhi Stalin: 10 நாட்களில் துணை முதல்வராகிறாரா உதயநிதி? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!
Deputy CM: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது இன்னும் ஓரிரு நாட்களோ அல்லது 10 நாட்களுக்குள் அறிவிப்பு வர அதிக வாய்ப்புள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் அவ்வப்போது குரலெழுப்பி வரும் நிலையில், அமைச்சர் தா.மோ. அன்பரசன் இந்த தகவலை கூறியுள்ளார்.
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது இன்னும் ஓரிரு நாட்களோ அல்லது 10 நாட்களுக்குள் அறிவிப்பு வர அதிக வாய்ப்புள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் அவ்வப்போது குரலெழுப்பி வரும் நிலையில், அமைச்சர் தா.மோ. அன்பரசன் இந்த தகவலை கூறியுள்ளார். இருப்பினும், உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்பது குறித்து எந்தஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று சமீப காலமாகவே தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.
10 நாட்களில் துணை முதல்வராகிறாரா உதயநிதி?
ஆனால், எப்போது என்று மட்டும் சஸ்பென்ஸாக இருந்து வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2021 சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி நின்ற சேப்பாக்ககம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், அவருக்கு உடனே அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
இதனை அடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக இணையத்தில் தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன.
உதயநிதியை துணை முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தொண்டர்கள் என பலரும் அவ்வப்போது குரல் எழுப்பி வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2009ஆம் ஆண்டு தனது மகன் மு.க.ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்தார். அதே வழியில் உதயநிதி ஸ்டாலினும் துணை முதல்வராக அறிவிக்கப்பட உள்ளார் என்று திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
இருப்பினும், எந்த ஒரு அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை. கடந்த சில நாட்களாக எப்போது வேண்டுமானாலும் உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்பபடலாம் என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது இன்னும் ஓரிரு நாட்களோ அல்லது 10 நாட்களுக்குள் அறிவிப்பு வர அதிக வாய்ப்புள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெறும் இடததை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நேரில் ஆய்வு செய்தார். காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 28ஆம் தேதி திமுக முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இதற்காக நத்தப்பேட்டை பகுதியில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
இங்கு சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், எழிலரசன், ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “உண்மையில் அதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஒரு சில நாட்களுக்குள் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்படுவார். ஏன் நாளைக்கு கூட இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம். எனவே, இன்னும் ஓரிரு நாட்களோ அல்லது 10 நாட்களுக்குள் துணை முதலமைச்சராக அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும், செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ள திமுக பவள பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிக்க வாய்ப்பு உள்ளது” என அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.
மறுத்த உதயநிதி:
நேற்று கூட இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார். தமிழகத்தின் துணை முதலமைச்சராக இன்று பதவியேற்க உள்ளதாக வெளியான தகவல் உண்மையா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், அது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்று தெரிவித்தார். அப்போது உங்களது பதவி ஏற்பு விழாவுக்காக தொண்டர்கள் பட்டாசுக்களுடன் அறிவாலயத்தில் காத்திருப்பதாக தகவல் வெளியானது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், நான் இன்று அறிவாலயத்திற்கே செல்லவில்லை. அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு வந்துவிட்டேன். தமிழகத்தின் துணை முதலமைச்சர் யார் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்