”அவரே பாவம்.. தெளிவா சொல்லிட்டாரு” ரஜினியிடம் துணை முதல்வர் பதவி குறித்து கேள்வி… உதயநிதி கலகல! - Tamil News | Tamil Nadu Minister Udhayanidhi stalin on Rajinikanth reply over Deputy CM post to former | TV9 Tamil

”அவரே பாவம்.. தெளிவா சொல்லிட்டாரு” ரஜினியிடம் துணை முதல்வர் பதவி குறித்து கேள்வி… உதயநிதி கலகல!

Updated On: 

20 Sep 2024 20:31 PM

சென்னை இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த பேசிய கருத்து இணையத்தில் வைரலானது. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அரசியல் என்னிடம் கேட்காதீங்க என்று ஆவேசத்துடன் கூறிய வீடியோக்கள் வைரலானது. இதற்கு தற்போது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கலகலப்பான பதிலை கூறியிருக்கிறார்.

”அவரே பாவம்.. தெளிவா சொல்லிட்டாரு ரஜினியிடம் துணை முதல்வர் பதவி குறித்து கேள்வி... உதயநிதி கலகல!

உதயநிதி ஸ்டாலின் - ரஜினிகாந்த்

Follow Us On

சென்னை இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த பேசிய கருத்து இணையத்தில் வைரலானது. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அரசியல் என்னிடம் கேட்காதீங்க என்று ஆவேசத்துடன் கூறிய வீடியோக்கள் வைரலானது. இதற்கு தற்போது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கலகலப்பான பதிலை கூறியிருக்கிறார். இன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, “இன்று நான் யூடியூப் பார்த்தம் பயந்துட்டேன். அதில் ஒரு டைட்டிலை படித்தேன். உதயநிதி துணை முதலமைச்சர் ஆகிறாரா? ரஜினி ஆவேசம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதை பார்த்தும் நான் பயந்துட்டேன். இதற்கான எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை. துணை முதல்வர் பதவி குறித்து முடிவு எடுக்க முழு உரிமையும் முதலமைச்சரிடம் தான் இருக்கிறது.

ரஜினி குறித்து உதயநிதி கலகல:

நீங்கள் இதை பற்றி முதலமைச்சரிடம் தான் கேட்கனும். அவரிடமும் நீங்கள் கேட்டு இருக்கீங்க. ஆனால், துணை முதல்வர் பதவி குறித்து ரோட்டில் போவோர் வருவோரிடம் எல்லாம் மைக்கை நீட்டி கேள்வி கேட்கிறார்கள். என்கிட்ட கேட்டாங்க ஒகே. ஆனால் அவரு பாவம். படப்பிடிப்பிற்காக விமான நிலையம் சென்ற அவரை வழிமறித்து கேட்டுள்ளார்கள். ஆனால், அவர் தெளிவாக அரசியல் கேள்வி கேட்காதீங்கனு என சொல்லிட்டாரு. அப்படி இருந்தும் யூடியூபில் அப்படி தலைப்பு வைக்கப்பட்டுள்ளது” என்று உதயநிதி கலகலப்பாக பதில் அளித்துள்ளார்.

Also Read: சென்னையில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா தெரியுமா?

முன்னதாக இன்று காலை ரஜினி வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதற்காக கூலி படப்பிடிப்பில் இருந்து நடிகர் ரஜினி சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

அதாவது, ”உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக உள்ளதாக கூறப்படுகிறதே”? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த நடிகர் ரஜினி, “அரசியல் கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள் என்று ஏற்கனவே கூறியுள்ளேன். வேட்டையன் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. கூலி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது” என்று பதிலளித்துவிட்டு சென்றார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் டிரெண்டானது. இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது பதில் கொடுத்துள்ளார்.

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா?

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று சமீப காலமாகவே தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. ஆனால், எப்போது என்று மட்டும் சஸ்பென்ஸாக இருந்து வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2021 சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி நின்ற சேப்பாக்ககம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆனால், அவருக்கு உடனே அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதனை அடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக இணையத்தில் தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கிறது.

உதயநிதியை துணை முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தொண்டர்கள் என பலரும் அவ்வப்போது குரல் எழுப்பி வருகின்றனர். முதலமைச்சர் கருணாநிதி 2009ஆம் ஆண்டு தனது மகன் மு.க.ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்தார். அதே வழியில் உதயநிதி ஸ்டாலினும் துணை முதல்வராக அறிவிக்கப்பட உள்ளார் என்று திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Also Read; பள்ளியில் மாணவிக்கு வளைகாப்பு… வெளியான ரீல்ஸ்.. ஆசிரியருக்கு பறந்த அதிரடி உத்தரவு!

சமீபத்தில் கூட அமைச்சர் தா.மோ. அன்பரசன்,  ”இன்னும் ஓரிரு நாட்களோ அல்லது 10 நாட்களுக்குள் அறிவிப்பு வர அதிக வாய்ப்புள்ளதாக” தெரிவித்திருந்தார். ஆனால், உதயநிதி மறுத்தே வருகிறார். அதாவது, “தனக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவது குறித்து முதல்வர் தான் முடிவு எடுப்பார். அமைச்சர்கள் அனைவரும் முதல்வருக்கு துணையாக தான் இருப்போம்” என்று பதில் அளித்து வருகிறார். இதுவரை உதயநிதிக்கு முதல்வர் பதவி வழங்குவது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

பல வகையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் பனீர்..!
ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்க உதவும் உணவுகள்!
உணவு சாப்பிட்ட உடன் இனிப்பு சாப்பிடலாமா?
சாப்பிட்ட உடனே டீ குடிக்கிறீங்களா? இதை படிங்க
Exit mobile version