கொடூரத்தின் உச்சம்.. நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு சித்ரவதை.. நெல்லையில் ஷாக்! - Tamil News | Tamil Nadu Police registered a case against the owner of a NEET coaching centre for brutally attacking students nellai | TV9 Tamil

கொடூரத்தின் உச்சம்.. நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு சித்ரவதை.. நெல்லையில் ஷாக்!

Tirunelveli Crime News: நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை கொடூராக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களை பிரம்பால் கண்மூடித்தனமாக தாக்கியதோடு மட்டுமின்றி, காலணியாலும் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நீட் பயிற்சி மைய பயிற்சியாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கொடூரத்தின் உச்சம்.. நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு சித்ரவதை.. நெல்லையில் ஷாக்!

நீட் பயிற்சி மாணவர்கள்

Updated On: 

18 Oct 2024 17:00 PM

நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை கொடூராக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களை பிரம்பால் கண்மூடித்தனமாக தாக்கியதோடு மட்டுமின்றி, காலணியாலும் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான அந்த நீட் பயிற்சி மைய உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்க ஜலால் அகமது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தியாவில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு மாணவர்கள் கடுமையாக படித்து வருகின்றனர். இதற்காக ஒரு தரப்பினர் வீட்டில் இருந்தப்படி தயாராகி வருகின்றனர்.

நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு சித்ரவதை

மற்றொரு தரப்பில் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர். இளநிலை நீட் தேர்வு எழுதவதற்கு 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பலரும் நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் சில சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் நீட் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தியில் பயிற்சியாளராக கேரளாவை சேர்நத் ஜலால் அகமது பணியாற்றி வருகிறார்.

Also Read: அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அகவிலைப்படி உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு!

இந்த பயிற்சி மையத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த சூழலில், இந்த நீட் பயிற்சி மையத்தில் இருந்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில்,  பயிற்சியாளர் வகுப்பறையில் இருந்த மாணவி ஒருவர் மீது காலணி கொண்டு எறிந்துள்ளார்.

நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்

மாணவி பயிற்சி மைய வாசலில் முறையாக காலணியை கழற்றவிடவில்லை என்று கூறி வீசியதாக தெரிகிறது. அதேபோல, டஸ்டர் கொண்டு மற்றொரு மாணவி மீது வீசியுள்ளார். மேலும், அந்த பயிற்சியாளர் மாணவர்களை கடுமையாக திட்டுகிறார்.

மாணவர்களை வரிசையாக வரவழைத்து அவர்களை பிரம்பால் கண்மூடித்தனமாக கொடூரமாக தாக்குகிறார்.  ஒவ்வொரு மாணவர்களை அழைத்து கொடூரமாக அவர்களை தாக்குகிறார். இதில் பல மணவர்களுக்கு கை, கால், முகம் என பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

Also Read: ”இந்தி மாத கொண்டாட்டம் எதற்கு?” பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை. ஆனாலும், வீடியோ வெளியான நிலையில், சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பயிற்சியாளர் ஜலால் அகமது  மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், நீட் பயிற்சி மையத்தில் மாணவ, மாணவிகள் சித்ரவதை செய்யப்பட்ட விவாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பயிற்சியாளரை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வைரல் நாயகிதான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்