Diwali 2024: தீபாவளி நாளில் 2 மணிநேரம் மட்டுமே.. பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்த மாசு கட்டுப்பாட்டு வாரியம்!

Deepavali 2024: பொதுமக்கள் எதிர்பார்த்ததை போலவே தீபாவளி பண்டிக்கைக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகின்ற நவம்பர் 9ம் தேதியான சனிக்கிழமை பணி நாளாக இயங்கும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Diwali 2024: தீபாவளி நாளில் 2 மணிநேரம் மட்டுமே.. பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்த மாசு கட்டுப்பாட்டு வாரியம்!

தீபாவளி (Image: GETTY)

Updated On: 

20 Oct 2024 18:05 PM

இந்தியா முழுவதும் வருகின்ற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி என்றதும் சிறுவயது முதலே நமக்கு புத்தாடைகள், பட்டாசுகள், புதுப்பட ரிலீஸ் உள்ளிட்டவை ஞாபகத்திற்கு வரும். குடும்பத்துடன் ஒன்றிணைந்து தீபாவளி நாளில் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து அன்றைய நாளை தொடங்குவோம். தொடர்ந்து, கடவுளை வேண்டி புத்தாடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்க தொடங்கும். அதன்பிறகு, காலை உணவுகள், இனிப்புகளை சாப்பிட்டு மீண்டும் பட்டாசுகளை ஊர் முழுக்க வெடித்து பறக்கவிடுவோம். தீபாவளி பண்டிகை வர இன்னும் இரண்டு வாரங்கள் இருந்தாலும் சில சிறுவர்கள் இப்போது முதலே பட்டாசுகளை வெடித்து வருகின்றனர். தீபாவளி நெருங்கும் நாட்களில் ஆங்காங்கே பட்டாசுகள் சிதற தொடங்கும்.

ALSO READ: Diwali 2024: வடமாநிலங்களில் 5 நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி.. ஏன் தெரியுமா?

பட்டாசுகள் எந்த அளவிற்கு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவோ, அதே அளவிற்கு பட்டாசுகளில் இருந்து வெளிப்படும் புகையினால் சுற்றுச்சூழல் மாசு அதிகரிக்கிறது. தீபாவளி நாளில் பட்டாசுகள் வெடிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதனை தொடர்ந்து, பலவேறு மாநில அரசுகளும் தங்களது மாநிலத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அந்தவகையில், கடந்த சில வருடங்களாக தமிழ்நாடு அரசும் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இந்தநிலையில், வருகின்ற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேரம் ஒதுக்கி அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டு தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளித்துள்ளது.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த கட்டுப்பாடுகள் என்ன..?

  • மாவட்ட நிர்வாகம் அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்த வெளிகளில் ஒன்றாக இணைந்து பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சி செய்ய வேண்டும்.
  • தீபாவளியின்போது பொதுமக்கள் குறைந்த ஒலியை வெளிப்படுத்தும், குறைந்த அளவில் காற்றை மாடுபடுத்தும் தன்மை கொண்ட படுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

பட்டாசுகள் வெடிக்கும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:

  • வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • தீபாவளி நாளில் அதிக ஒலிகளை எழுப்பக்கூடிய தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
  • எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்கள், குடிசை பகுதிகள், டிரான்ஸ்பார்மர்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

தீபாவளிக்கு 4 நாள்கள் விடுமுறை:

பொதுமக்கள் எதிர்பார்த்ததை போலவே தீபாவளி பண்டிக்கைக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகின்ற நவம்பர் 9ம் தேதியான சனிக்கிழமை பணி நாளாக இயங்கும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: Diwali Sweet: தீபாவளிக்கு வித்தியாசமான ஸ்வீட் செய்ய ஆசையா? உங்களுக்காக வாழைப்பழ அல்வா ரெசிபி!

இந்தாண்டு தீபாவளியானது வருகின்ற அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நாள் வியாழக்கிழமையில் வருகிறது. வியாழக்கிழமைக்கு ஒருநாளுக்கு பிறகு சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், இடையில் இருக்கும் வெள்ளிக்கிழமை மட்டும் நாளாக இருந்தது. இதையடுத்து, வெளியூர் மக்களின் நலனை கருத்தில் கொண்டும், குடும்பத்துடன் இருக்க கூடுதல் நேரத்தை கொடுக்கவும் தமிழ்நாடு அரசு நவம்பர் 1ம் தேதி விடுமுறையாக அறிவித்தது. இதன் காரணமாக, நவம்பர் 1ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது. 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருவதையொட்டி, தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!