5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பள்ளி மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டப்பட்ட விவகாரம்.. பள்ளிக்கல்வித்துறை விசாரணை..

கடந்த மாதம் அக்டோபர் 21 ஆம் தேதி வகுப்பறையில் ஆசிரியர்கள் யாரும் இல்லை. அப்போது வேறு ஒரு ஆசிரியர் ஒரு மாணவரை வகுப்பறையை கண்காணிக்கும் படி கூறியுள்ளார். சக மாணவர்கள் பேசக்கூடாது என்பதற்காக, பேசிய 5 மாணவர்களில் வாயில் செல்லோ டேப் ஒட்டியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டப்பட்ட விவகாரம்.. பள்ளிக்கல்வித்துறை விசாரணை..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 12 Nov 2024 15:37 PM

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகெ அய்யம்பட்டி பள்ளியில் மாணவர்கள் பேசாமல் இருப்பதற்காக வாயில் செல்லோ டேப் ஒட்டிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது பெற்றோர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பெற்றோர்கள தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி 4 ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்களின் வாயில் செல்லோ டேப் ஒட்டி 2 மணி நேரமாக உட்கார வைத்துள்ள விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டதற்கு, அவர் உரிய பதில் அளிக்கவில்லை. எனவே, இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

பள்ளி தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கம்:

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மதியழகன் குறிப்பிடுகையில், “ கடந்த மாதம் அக்டோபர் 21 ஆம் தேதி வகுப்பறையில் ஆசிரியர்கள் யாரும் இல்லை. அப்போது வேறு ஒரு ஆசிரியர் ஒரு மாணவரை வகுப்பறையை கண்காணிக்கும் படி கூறியுள்ளார். சக மாணவர்கள் பேசக்கூடாது என்பதற்காக, பேசிய 5 மாணவர்களில் வாயில் செல்லோ டேப் ஒட்டியுள்ளார். மாணவர்களின் வாயில் ஆசிரியர்கள் யாரும் செல்லோடேப் ஒட்டவில்லை. இது குறித்து விசாரித்து அறிக்கை தர வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எங்கே?

இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் புனிதாவிடம் கேட்டப்போது, “ வகுப்பறையில் ஆசிரியர் இல்லாததால் சக மாணவர் பேசக்கூடாது என்பதற்காக வாயில் டேப் ஒட்டியுள்ளனர். அதனை தொடர்ந்து நான் அந்த வகுப்பறைக்கு சென்ற போது ஒரே ஒரு மாணவன் வாயில் மட்டும் டேப் ஒட்டப்பட்டிருந்தது. அதை கனடதும் நான் உடனடியாக அகற்றிவிட்டேன். இதனை யார் புகைப்படம் எடுத்தது என்று தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக என்னிடமும், மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்களிடம் நாங்கள் விளக்கம் அளித்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: சிக்கலில் நடிகை கஸ்தூரி.. 2 தனிப்படைகள் அமைப்பு.. கண்காணிப்பு தீவிரம்!

இந்த சம்பவம் அக்டோபர் 21 ஆம் தேதி நடந்துள்ளது. வகுப்பறையில் மாணவர்காளில் வாயில் செல்லோடேப் ஒட்டப்பட்டிருப்பதை 3 ஆம் வகுப்பு ஆசிரியர் புகைப்படம் எடுத்து பெற்றோருக்கு அனுப்பியுள்ளார். இதனை கண்ட பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இது குறித்து பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் சென்று கேட்டப்போது, உங்கள் பிள்ளைகள் வகுப்பறையில் பேசிக்கொண்டிருந்ததால் வாயில் செல்லோ டேப் ஒட்டப்பட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 

 

 

Latest News