Formula 4 Chennai: ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதில் சிக்கல்.. உயர் நீதிமன்றத்தில் முறையீடு..

தீவுத்திடல் மைதானத்தை சுற்றியிருக்கும் 3.5 கி.மீ. சுற்றளவு சாலைகளில் நடைபெற உள்ளது. அதன்படி, தீவுத்திடலில் தொடங்கும் கார் பந்தயமானது அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலை சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும் பந்தயத்திற்கு இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரத்யேக கார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Formula 4 Chennai: ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதில் சிக்கல்.. உயர் நீதிமன்றத்தில் முறையீடு..

கோப்பு புகைப்படம் (image coourtesy: getty images)

Published: 

31 Aug 2024 15:37 PM

ஃபார்முலா 4 கார் பந்தயம்: மழையின் காரணமாக FIA சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. தீவுத்திடல் மைதானத்தை சுற்றியிருக்கும் 3.5 கி.மீ. சுற்றளவு சாலைகளில் நடைபெற உள்ளது. அதன்படி, தீவுத்திடலில் தொடங்கும் கார் பந்தயமானது அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலை சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும் பந்தயத்திற்கு இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரத்யேக கார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த போட்டிகளை 8000 பேர் பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி சுற்றுகள் நடைபெறும். பின்னர், பொழுதுபோக்கு சாகச கார் பந்தய நிகழ்ச்சிகள் நடைபெறும். பின்னர், தகுதிச்சுற்றுகள் இரவு 9 மணி வரை நடைபெறும். 1ம் தேதியான நாளை கார் பந்தயங்கள் 2 பிரிவுகளாக நடைபெறும். 2.30 மணியில் இருந்து இரவு 10 மணி வரை போட்டிகள் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க: ஜிமெயிலில் அறிமுகம் செய்யப்பட்ட கேள்வி பதில் அம்சம்.. இனி எல்லாம் ஈசி தான்!

கார் பந்தயத்தை பார்க்கும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பபட்டுள்ளன. பந்தயத்தை பார்க்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 4 அடி உயர கான்கிரீட் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த கார் பந்தயத்தை நேரில் பார்ப்பதற்கான டிக்கெட் விலை ரூ.1,699 முதல் ரூ.10,999 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் பேடிஎம் இன்சைடர் ஆப் மற்றும் வெப்சைட்டில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், இரண்டு நாள் போட்டிகளையும் பார்ப்பதற்கும் தனியாக தனி பாஸ் விற்பனை செய்யப்படுகிறது. அதன் ஆரம்ப விலை ரூ.2,125 முதல் ரூ.16,999 வரை நிர்ணம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் முடக்கம்.. கடுப்பான எலான் மஸ்க்.. என்ன நடந்தது?

இந்த சூழலில் கார் பந்தயத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக FIA சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. 4 மணி நேர கால நீட்டிப்பு வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் 12 மணிக்குள் சான்றிதழ் பெற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கூடுதலாக 4 மணி நேரம் அவகாசம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?