விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் 3 குழந்தைகள் உயிரிழப்பு.. தேனியில் நடந்த சோகம்..
விநாயகர் சதுர்த்தி என்றாலே நாம் அனைவரின் நினைவுக்கும் வருவது ஒவ்வொரு வீதிக்கும் இருக்கும் விநாயகர் சிலைகளும், அவரது வழிபாட்டின் போது படைக்கப்படும் கொழுக்கட்டை, பொரி போன்ற நைவேத்தியங்களும் தான். இதிலிருந்து 3ஆம் நாள், 5 ஆம்நாள், 7 ஆம் நாள் ஆகிய ஒற்றைப்படை தினங்களில் அருகில் உள்ள ஆறுகள். குளங்கள், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவது வழக்கம்.
விநாயகர் சதுர்த்தி: தேனி மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் டிராக்டர் கவிழ்ந்து 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனைமுகன், முழு முதற்கடவுள் விநாயகர் அவதரித்த தினமாக ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் கருதப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி என்றாலே நாம் அனைவரின் நினைவுக்கும் வருவது ஒவ்வொரு வீதிக்கும் இருக்கும் விநாயகர் சிலைகளும், அவரது வழிபாட்டின் போது படைக்கப்படும் கொழுக்கட்டை, பொரி போன்ற நைவேத்தியங்களும் தான். இதிலிருந்து 3ஆம் நாள், 5 ஆம்நாள், 7 ஆம் நாள் ஆகிய ஒற்றைப்படை தினங்களில் அருகில் உள்ள ஆறுகள். குளங்கள், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவது வழக்கம்.
மேலும் படிக்க: தமிழ் திரையுலகிலும் ‘ஹேமா கமிட்டி’.. அதிரடியில் இறங்கிய நடிகை ரோகிணி.. பெரிய தலைகள் சிக்குமா?
ஒவ்வொரு ஆண்டும் அந்த நேரத்தில் என்னென்ன ட்ரெண்டிங்கில் இருக்கிறதோ அதற்கு ஏற்ப விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த ஆண்டு ஜெயிலர் விநாயகர், ஜிகர்தண்டா விநாயகர் என விதவிதமாக விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பெரிய பெரிய சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் தேனி மாவட்டம் தேவாரத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அதனை தொடர்ந்து அந்த சிலையை ஊர்வலமாக எடுத்து சென்றுள்ளனர். விநாயகர் சிலையை டிராக்டர் வாகனத்தில் வைத்து எடுத்து செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தின் போது ஏராளமான பொதும் மக்கள் கலந்துகொண்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் மிகவும் உற்சாகத்துடன் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக டிராக்டர் நிலை தடுமாறி கீழே சரிந்து விழுந்துள்ளது. இதனால் மேலே இருந்த விநாயகர் சிலையும் கவிழ்ந்துள்ளது.
மேலும் படிக்க: இனி இந்த ஆவணம் இருந்தால் தான் ஆதார் கார்டு.. வந்தது மேஜர் அறிவிப்பு!
டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அருகில் இருந்த பொது மக்கள் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த இரண்டு பேரை அருகில் இருக்கும் மருத்துவமானைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முன் அனுமதி பெறப்பட்டதா? என்ன நடந்தந்து என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.