3 மாதம் கடன் செலுத்தாததால் ஆத்திரம்.. வீட்டில் அத்துமீறிய நிதி நிறுவன ஊழியர்கள்.. நடந்தது என்ன?
இன்றைக்கு யாருக்கும் நிலையான வேலை இருப்பது இல்லை. யாருக்கு எப்போது வேலையில் இருந்து பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பது பலருக்கும் தெரியாது. இப்படியான சூழலில் நாம் வாங்கும் கடனை நம்மால் கட்ட முடியுமா? சமாளிக்க முடியுமா என்பதை பல முறை யோசிக்க வேண்டும். அதிகப்படியாக கடன் வாங்கி, அது நம் தலை மீது சுமையாக மாறிவிடக்கூடாது.
வீட்டுக்கடன் தவணை கடந்த 3 மாதம் செலுத்தாததால் ஆத்திரமடைந்த தனியார் பைனான்ஸ் ஊழியர்கள் வீட்டு சுவற்றில் இந்த வீடு கடனில் உள்ளது என பெயிண்டில் எழுதியுள்ளனர். திருப்பூரில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. மேலும் கடன் வசூலிக்க இது சரியான முறை இல்லை என்றும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் சொந்த வீடு வாங்குவது என்பது பலரது கணவாக உள்ளது. இதற்காக வங்கி, பைனான்ஸ், நிதி நிறுவனம் மூலம் கடன் வாங்கி வீடு வாங்குகிறோம். ஆனால் இன்று நாம் வாழும் வாழ்க்கை முறையில் நாம் சம்பாதிக்கும் பணத்தில் மாத தவணை கட்ட முடியுமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும் இன்றைக்கு யாருக்கும் நிலையான வேலை இருப்பது இல்லை. யாருக்கு எப்போது வேலையில் இருந்து பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பது பலருக்கும் தெரியாது. இப்படியான சூழலில் நாம் வாங்கும் கடனை நம்மால் கட்ட முடியுமா? சமாளிக்க முடியுமா என்பதை பல முறை யோசிக்க வேண்டும். அதிகப்படியாக கடன் வாங்கி, அது நம் தலை மீது சுமையாக மாறிவிடக்கூடாது.
மேலும் படிக்க: சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து.. எந்த ரூட் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!
அத்துமீறிய நிதி நிறுவன ஊழியர்கள்:
அந்த வகையில் திருப்பூரை சேர்ந்த ஒருவர் கடன் வாங்கி வீடு கட்டியுள்ளார். ஆனால் சூழ்நிலை காரணமாக அவரால் கடந்த மூன்று மாதங்களாக ஈஎம்ஐ செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரைமெல் கேப்பிடல் அன்டு பைனான்ஸ் நுறுவன ஊழியர்கள் நேற்று வீட்டிற்கு வந்து வீட்டில் இருப்பவர்களை பார்த்து தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். அதோடு, வீட்டுச் சுவற்றில் “வீடு கடனில் உள்ளது” என பெயிண்ட்டால் எழுதியுள்ளனர்.
மேலும் சுவற்றில் ஒரு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அதில், “முருகேசன் சோமசுந்தரம் பிரைமெல் கேப்பிடல் அன்டு பைனான்ஸ் நிறுவனத்தில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்தால், நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற அதிகாரியால் இந்த சொத்து சுவாதீனம் செய்யப்படும் என்பதை கடனாளி உத்திரவாதி மற்றும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறத.. மேலும் இந்த சொத்திலோ அல்லது இந்த சொத்தின் பெயரிலோ எந்த வில்லங்கத்தையும் ஏற்படுத்தக்கூடாது” என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: கல்லூரி படிப்பில் பெரிய மாற்றம்.. 2 ஆண்டிலே பட்டப்படிப்பை முடிக்கலாம்.. யுஜிசி முக்கிய தகவல்!
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திடுள்ளது. மேலும் கடனை வசூலிக்க இது சரியான முறை இல்லை என்றும், இது போல் நடந்துக்கொள்வது அநாகரீகம் என்றும் பலரும் கருத்துக்களை முன்வைத்து வருகினறனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி பலரும் பகிர்ந்து வருகின்றனர். பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.