Tamilnadu Weather Alert: 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. மண்டையை பொளக்கும் வெயில்..

சென்னையை பொறுத்தமட்டில் மீனம்பாக்கத்தில் 39.2 டிகிரி செல்சியஸும் நுங்கம்பாக்கத்தில் 38 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. அதாவது வழக்கத்தை விட 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Tamilnadu Weather Alert: 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. மண்டையை பொளக்கும் வெயில்..

கோப்பு புகைப்படம்

Published: 

18 Sep 2024 13:25 PM

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 18.09.2024 மற்றும் 19.09.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்றும் நாளையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (18.09.2024 மற்றும் 19.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. தென்தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு அவலாஞ்சி (நீலகிரி) 2, சீர்காழி (மயிலாடுதுறை) 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை (சமவெளிப்பகுதிகள்):

அதிகபட்ச வெப்பநிலை :- மதுரை விமான நிலையம்: 41.0 ° செல்சியஸ்
குறைந்தபட்ச வெப்பநிலை :- ஈரோடு: 18.6 ° செல்சியஸ்

சென்னையை பொறுத்தமட்டில் மீனம்பாக்கத்தில் 39.2 டிகிரி செல்சியஸும் நுங்கம்பாக்கத்தில் 38 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. அதாவது வழக்கத்தை விட 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க: வழக்கத்திற்கு மாறான வெப்பநிலை.. காரணம் என்ன? பிரத்யேக பேட்டி அளித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன்..

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

18.09.2024 முதல் 22.09.2024 வரை: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

18.09.2024 முதல் 22.09.2024 வரை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

18.09.2024: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும்,
மத்தியமேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும் படிக்க: என்கவுண்டரில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக்கொலை.. யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி?

19.09.2024: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும்,
மத்தியமேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

20.09.2024: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

21.09.2024 மற்றும் 22.09.2024: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!