Tamilnadu Weather Alert: சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 2 நாட்களுக்கு கொளுத்தும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
Today Weather: தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (20.09.2024 மற்றும் 21.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வரும் 22 முதல் 26ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (20.09.2024 மற்றும் 21.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: ரூ.14,000 கடனை திருப்பி தராததால் ஆத்திரம்.. நண்பனின் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்.. பகீர் சம்பவம்!
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
20.09.2024 முதல் 24.09.2024 வரை: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
20.09.2024 முதல் 23.09.2024 வரை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
24.09.2024: தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
20.09.2024: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியமேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
21.09.2024 முதல் 24.09.2024 வரை: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக உயர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 110 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகி வருகிறது. செப்டம்பர் மாதத்தில் இது போன்ற அதிகபட்ச வெப்பநிலை பதிவாவது இதுவே முதல் முறையாகும். இந்த வழக்கத்திற்கு மாறான வெப்பநிலையால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பொதுவாக ஏப்ரல், மே, ஜூன் போன்ற காலக்கட்டத்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் கடந்து பதிவாகும்.
Also Read: அக்டோபர் 27-ல் தவெக மாநாடு.. தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த விஜய்.. அறிக்கையில் கூறியிருப்பது என்ன?
ஆனால் இந்த ஆண்டு மாறாக மே மற்றும் ஜூன் ஆகிய மதங்களில் நல்ல மழை பதிவு இருந்தது. ஜூன் மாதம் முடிந்தது முதல் ஜூலை தொடக்கத்தில் இருந்து வெப்பநிலை கணிசமாக உயரத்தொடங்கியது. இது வழக்கத்திற்கு மாறாக பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை அதிகபட்ச வெப்ப நிலை மதுரை விமான நிலையத்தில் 39.7 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. அதேபோல, குறைந்தபட்ச வெப்பநிலை ஈரோடு மாவட்டத்தில் 19.6 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.