5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Weather Alert: சில்லென மாறிய சென்னை.. இனி தினமும் மழை இருக்கு.. வானிலை சொல்வது என்ன?

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamilnadu Weather Alert: சில்லென மாறிய சென்னை.. இனி தினமும் மழை இருக்கு.. வானிலை சொல்வது என்ன?
கோப்பு புகைப்படம் (pic courtesy: twitter)
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Sep 2024 08:54 AM

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில், ஜூன் மாதம் முதல் வெயிலின் தாக்கம் பயங்கரமாக உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக உயர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 110 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகி வருகிறது. செப்டம்பர் மாதத்தில் இது போன்ற அதிகபட்ச வெப்பநிலை பதிவாவது இதுவே முதல் முறையாகும். இந்த வழக்கத்திற்கு மாறான வெப்பநிலையால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள், பெரியவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக ஏப்ரல், மே, ஜூன் போன்ற காலக்கட்டத்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் கடந்து பதிவாகும்.

மேலும் படிக்க:  10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. சென்னையில் சூப்பரான வேலை.. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!

இந்த சூழலில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் நகரின் அனேக பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பநிலை சற்று தணிந்து காணப்படுகிறது. மேலும் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை தணிந்து குளிர்ந்த வானிலை நிலவுகிறது. சென்னையில் காமராஜர் சாலை, எம்.ஆர்.சி நகர், பட்டினப்பாக்கம், அடையாறு, பெசண்ட் நகர், கிண்டி, மடிப்பாக்கம், மேடவாக்கம், ஆதம்பாக்கம், சோழிங்கநல்லூர், தொரைப்பாக்கம் என அனேக பகுதிகளில் மழை பதிவானது.


இந்த மழை தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைத்தளப் பகுதியில், “ வெப்பநிலை வாட்டிய நிலையில் அதிலிருந்து சற்று விலக்கு கிடைத்துள்ளது. வட தமிழகத்தில் நல்ல மழை இருக்கும். இன்று முதல் வட மற்றும் தென் தமிழகத்தில் இரவு முதல் அதிகாலை நேரங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இன்னும் சில நாட்களில் வட கிழக்கு பருவ மழை தொடங்க இருக்கும் நிலையில், இந்த மழை நீடிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காலை 10 மணி வரை சென்னை, கஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழையும், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுரை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை: (மில்லிமீட்டரில்)

மீனம்பாக்கம்_ (சென்னை) 10.0, நுங்கம்பாக்கம்_ (சென்னை) 5.3, விஐடி சென்னை 50.5, ஜெயா பொறியியல் கல்லூரி (சென்னை) 13.5, துருத்தணி (திருவள்ளூர்) 10.5, சத்தியபாமாம் பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) 85.5, சாய்ராம் கல்லூரி (செங்கல்பட்டு) 56.5, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 33.0, ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி (காஞ்சிபுரம்) 14.5, செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 11.0, ஒய்எம்சிஏ நந்தனம்_ (சென்னை) 10.0, பூந்தமல்லி_ (திருவள்ளூர்) 9.5 மிமீ மழை பதிவாகியுள்ளது.

 

Latest News