5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamil Pudhalvan Scheme: தமிழ் புதல்வன் திட்டம்.. கோவையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்..

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வர பயின்று, உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை, கடந்த 2022ம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கினார். அந்த திட்டம் தற்போது மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இதன் மூலம், 3.68 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்றும், அதற்காக 360 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் உக்கடம் மேம்பாலம் மற்றும் கலைஞர் கருணாநிதி சிலையும் திறந்து வைக்கிறார்.

Tamil Pudhalvan Scheme: தமிழ் புதல்வன் திட்டம்.. கோவையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்..
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 09 Aug 2024 08:28 AM

தமிழ் புதல்வன் திட்டம்: தமிழ்நாட்டில் தமிழ் புதல்வன் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று கோவையில் இருக்கும் அரசுகலைக் கல்லூரியில் தொடங்கி வைக்கிறார். கோவையில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை 11 மணிக்கு விமானம் மூலம் கோவைக்கு பயணிக்கிறார். பின்னர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் அவர், தமிழ் புதல்வன் திட்டத்தை மாணவர்களுக்காக தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் வழியில்) பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படவுள்ளது.

முன்னதாக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வர பயின்று, உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை, கடந்த 2022ம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கினார். அந்த திட்டம் தற்போது மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இதன் மூலம், 3.68 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்றும், அதற்காக 360 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் உக்கடம் மேம்பாலம் மற்றும் கலைஞர் கருணாநிதி சிலையும் திறந்து வைக்கிறார்.

மேலும் படிக்க: விக்ரமின் ‘தங்கலான்’ படம் எப்படி இருக்கு… முதல் விமர்சனம் இதோ!

யார் தகுதியானவர்கள்?

தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளங்கலை பட்டம், தொழிற்சார் படிப்புகளில் சேர்க்கையில் முன்னுரிமை வழங்குதல் சட்டம், 2021ல் குறிப்பிட்டுள்ளவாறு “அரசுப் பள்ளி” என்பது அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை பள்ளிகள், பள்ளிகள் கள்ளர் மறுவாழ்வு பள்ளிகள், வனத் துறை பள்ளிகள் மற்றும் கல்விக்கான அடிப்படை உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி பெறும் மாணவர்கள் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் நடத்தப்படும் அரசு சேவை இல்லங்கள் / அரசு குழந்தைகள் காப்பகங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது.

மேலும் படிக்க: சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை.. உங்க ஏரியாவில் எப்படி? லிஸ்ட் இதோ..

உயர்கல்வி என்பது கலை மற்றும் அறிவியல், தொழிற்சார் படிப்புகள், இணை மருத்துவம் சார்ந்த படிப்புகள், பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி மற்றும் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு போன்றவற்றை உள்ளடக்கியது. தொலைதூர / அஞ்சல் வழியிலும், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையை பெற இயலாது. வேறு ஏதேனும் உதவித் தொகை பெற்று வருபவராக இருப்பினும், இத்திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவராவர்.

மற்ற மாநில பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் இத்திட்டத்தில் பயனடைய தகுதி அற்றவர்களாவர். ஒரே குடும்பத்திலிருந்து எத்தனை மாணவர்கள் தகுதி பெற்றிருப்பினும், அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பிக்கலாம். பள்ளிப் படிப்பிற்கு பின்னர் உயர்கல்வி பயின்று வரும் மாணவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவராவர்.

Latest News