TVK Vijay: த.வெ.க மாநாடு.. தொண்டர்களுக்கு 8 கண்டிஷன் போட்ட புஸ்ஸி ஆனந்த்!

த.வெ.க மாநாடு: தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாநாடு தொடர்பாக கட்சி தொண்டர்கள் முக்கிய உத்தரவை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கியுள்ளார். மாநாட்டு வரும் தொண்டர்கள் மது அருந்துவிட்டு வரக் கூடாது போன்ற அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

TVK Vijay: த.வெ.க மாநாடு.. தொண்டர்களுக்கு 8 கண்டிஷன் போட்ட புஸ்ஸி ஆனந்த்!

விஜய் - புஸ்ஸி ஆனந்த்

Updated On: 

25 Oct 2024 11:01 AM

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாநாடு தொடர்பாக கட்சி தொண்டர்கள் முக்கிய உத்தரவை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கியுள்ளார். அதன்படி,”தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வரும் தோழர்கள் மது அருந்திவிட்டு மாநாடு நடைபெறும் பகுதிக்கு வர வேண்டாம். மாநாடு நடைபெறும் இடத்தை சுததமாக வைத்துக் கொள்ள வேண்டும். ரயில் தண்டவாளம் மற்றும் கிணறு போன்ற ஆபத்தான இடங்களில் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும். சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு செய்யக்கூடாது.

தொண்டர்களுக்கு அட்வைஸ்:

மாநாட்டிற்கு வரும் பெண்கள் மற்றும பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மாநாட்டிற்கு வரும் அதிகாரிகளை மரியாதையாக நடத்த வேண்டும். மருத்துவக் குழு மற்றும் தீயணைப்பு துறைக்கு உரிய வசதிகள் செய்து தர வேண்டும்.

வண்டியில் வேகமாகவும் அல்லது சாகசங்கள் போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. பெரிய வாகனங்களில் மாநாட்டிற்கு வரும் தோழர்கள் முன்கூட்டியே வர திட்டமிடுங்கள். பேருந்து மற்றும் வேன்களில் தகுதி எண்ணிக்கையில் மட்டுமே தொண்டர்களை அமர வைக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

Also Read: உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் எங்கெல்லாம் மழை தெரியுமா? வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து தற்போது அரசியல் தலைவராக அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை குறித்து வைத்து தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கி இருக்கிறார்.

எக்கச்சக்க எதிர்பார்ப்பு:

அரசியல் கட்சி தொடங்கிய பிறகு சமூக பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மேலும், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தனது ஒவ்வொரு நகர்வையும் எடுத்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தியது மிகப்பெரிய அளவில் விமர்சனங்களை பெற்றது.

மேலும் செப்டம்பர் 5ஆம் தேதி கேட் படத்தின் வெளியீடு மற்றும் அதன் வெற்றி ஆகியவற்றால் ரசிகர்கள் மட்டுமின்றி தொண்டர்களும் படு குஷீயில் உள்ளனர். கடந்த வாரம் கூட, அண்ணா பிறந்தநாளுக்கு வாழ்த்து, பெரியார் பிறந்தநாளுக்கு அவரது சிலைக்கு மரியாதை செலுத்தியது திராவிட சித்தாந்தத்தை கையில் எடுப்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.

இதன் மூலம், விஜய் என்ன மாதிரியான அரசியலை நோக்கி பயணிக்கப்போகிறார் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார். இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் அரசியல் மாநாட்டை நடத்தி திட்டமிட்டிருந்த விஜய், இதற்கான பணியிகளை கட்சி பொதுச் செயலாளர் பூஸ்ஸி ஆனந்திடம் ஒப்படைத்தார்.

மாநாடு நடத்துவதற்கு பல்வேறு இடங்களை ஆய்வு செய்ததில் கடைசியாக விக்கிரவாண்டி தேர்வு செய்யப்பட்டது. சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலை என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டு வரும் அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் வெளியிட்டார்.

இதற்காக அனுமதி கோரி நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் மனு அளிக்கப்பட்டது. மாநாட்டிற்கு இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள கட்சியின் தலைவர் விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், மாநாடு தொடர்பான ஏற்பாடுகளை செய்ய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

50,000 பேர் பங்கேற்பா?

அதன்படி, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சுமார் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதில் ஒவ்வொரு குழுவிலும் 12 பேர் வரை இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மாநாட்டில் 50,000 பேர் பங்கேற்பார்கள் என்று கட்சி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

Also Read: இரண்டரை மாதத்துக்குள் 3 என்கவுண்டர்.. சென்னையில் நடக்கும் அடுத்தடுத்த சம்பவம்.. நடந்தது என்ன?

இப்படியான சூழலில் தான் கட்சியின் பொதுச் செயலாளர்  புஸ்ஸி ஆனந்த் தொண்டர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.  அதாவது, தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வரும் தோழர்கள் மது அருந்திவிட்டு மாநாடு நடைபெறும் பகுதிக்கு வர வேண்டாம் என்றும் மாநாட்டிற்கு வரும் அதிகாரிகளை மரியாதையாக நடத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளார்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!