5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Maanadu: நாளை த.வெ.க மாநாடு.. விழாக்கோலம் பூண்ட விக்கிரவாண்டி.. விஜய்யின் ஏற்பாடுகள் என்ன?

த.வெ.க மாநாடு: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை (அக்டோபர் 27) நடைபெற உள்ளது. நாளை மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது.

TVK Maanadu: நாளை த.வெ.க மாநாடு.. விழாக்கோலம்  பூண்ட விக்கிரவாண்டி.. விஜய்யின் ஏற்பாடுகள் என்ன?
த.வெ.க மாநாடு
umabarkavi-k
Umabarkavi K | Published: 26 Oct 2024 15:30 PM

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை (அக்டோபர் 27) நடைபெற உள்ளது. நாளை மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 2 வாரங்களுக்கு மேலாக மாநாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அந்த பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை காலையில் முழுமையாக முடிக்கும் வகையில் அனைத்து பணிகளும் விறு விறுப்பாக நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் விஜய் தனது கட்சியின் கொள்கை குறித்து பேச உள்ளதாக தெரிகிறது.

நாளை நடைபெறும் த.வெ.க மாநாடு:

அத்துடன் தான் அறிமுகப்படுத்திய மஞ்சள், சிவப்பு நிறத்துடன் நட்சத்திரங்கள், யானை குறியீட்டுடன் கூடிய கொடி குறித்த விளக்கத்தையும் இந்த மாநாட்டில் விஜய் பேச உள்ளதாகவும் தெரிகிறது.  மாநாட்டிற்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சுமார் 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டள்ளது. மேலும், பார்க்கிங் வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி போன்ற அத்தியாவசிய தேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் மாநாடு நடைபெறும் இடத்தில் 150க்கும் மேற்பட்ட மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் இருப்பதாகவும், ஆம்புலஸ் குழுவினர், கண்காணிப்பு குழுவினர் ஆகியார் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மாநாட்டின் முகப்பு பக்கத்தில் மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

Also Read: மதுரையில் பதிவான 11 செ.மீ மழை.. இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

ஏற்பாடுகள் என்னென்ன?

அதன் தொடர்ச்சியாக மாமன்னன் ராஜராஜ சோழன், அழகு முத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், மருது சகோதரர்கள், புலித்தேவன், தீரின் சின்னமலை ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மாநாடு மேடைக்கு இடதுபுறம் சட்டமேதை அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோருடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட் ஆவுட் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், மாநாட்டில் பிரபலங்களும் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், யார் யார் வருவார்கள் என்ற எந்த தகவலும் வெளிவரவில்லை. இதனால் நாளை நடைபெறும் மாநாடு மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், நாளை நடைபெறும் மாநாட்டில் விஜய் 3 மணி நேரம் பேசுவார் என்று கூறப்படுகிறது. அவர் என்ன பேசுவார், அவரது கொள்ளை குறித்து என்ன விளக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தோழர்களுக்கு விஜய் அறிவுரை:

கட்சியின் முதல் மாநில மாநாடு என்பதால் அதனை மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் கண்டிப்பாக கவனிக்கும் என்பதை உணர்ந்துள்ள விஜய் 2 முறை கடிதம் எழுதி தொண்டர்களை உஷார்படுத்தியுள்ளார். இந்த நிலையில், மீண்டும் விஜய் ரசிகர்கள், தோழர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் விஜய் கூறியதாவது, “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன்.

காரணம்,எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன்.

Also Read: கனமழையால் ஸ்தம்பித்த மதுரை.. இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர்..

அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள்.அப்படித்தான் வரவேண்டும். நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்” என்று கூறியிருக்கிறார்.

Latest News