5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Maanadu: த.வெ.க மாநாடு.. விஜய் எடுத்த அதிரடி முடிவு.. 234 தொகுதிகளுக்கும் பறந்த உத்தரவு!

த.வெ.க மாநாடு: தமிழக வெற்றிக் கழக மாநாட்டி வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. விஜய் கட்சி தொடங்கி நடைபெறும் முதல் மாநாடு என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் சூழலில், 234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்களை விஜய் நியமித்துள்ளார்.

TVK Maanadu: த.வெ.க மாநாடு..  விஜய் எடுத்த அதிரடி முடிவு.. 234 தொகுதிகளுக்கும் பறந்த உத்தரவு!
த.வெ.க விஜய்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 13 Oct 2024 17:52 PM

தமிழக வெற்றிக் கழக மாநாட்டி வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. விஜய் கட்சி தொடங்கி நடைபெறும் முதல் மாநாடு என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் சூழலில், 234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்களை விஜய் நியமித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி சாலை கிராமத்தில் அக்டோபர் 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்க உள்ளது. மாநாட்டிற்கு இன்றும் சில நாட்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

த.வெ.க மாநாடு

மாநாடு நடத்துவதற்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறையும் அனுமதி அளித்துள்ளது. அதோடு, பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, 33 நிபந்தனைகளில் அதில் 17 நிபந்தனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று விழுப்புரம் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

மாநாடு நடைபெறும் நாளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது, பார்க்கிங் வசதி, பாதுகாப்பு, குடிநீர் வசதி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டிற்கு குழந்தைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது.

Also Read: தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறையா? தமிழக அரசு எடுக்கப்போகும் முக்கிய முடிவு!

இந்த மாநாட்டில் சுமார் 50,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டின் முதல் கட்டமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பூமி பூஜை நடத்தப்பட்டது. மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா மற்றும் பூமி பூஜை நடத்தப்பட்டது.

234 தொகுதிகளுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு

இந்த பூஜையில் விஜய் கலந்து கொள்ளாத நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.  இதற்கு அடுத்த கட்டமாக மாநாடு நடைபெறும் இடத்தில் தீவிரமாக பணிகள் நடந்து வருகிறது. மாநாடு பந்தல், பார்க்கிங், சமையல் கூடம், நுழைவாயில் என பல்வேறு பணிகள் நடைபெற இருக்கும்.


இப்படியான சூழலில்,  234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்களை விஜய் நியமித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநாட்டுக்கான களப் பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், தலைவரின் ஆணைப்படி சட்டமன்றத் தொகுதி அளவில் மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க, மாவட்ட தலைவர்கள் மற்றும் அணித் தலைவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் ஒருங்கிணைந்து செயல்பட 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொகுதியில் இருந்து மாநாட்டிற்கு வருபவர்களை அழைத்து வந்தும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும், இவர்களுக்கு தற்போது தல்காலிக பொறுப்பு வழங்கப்பட்டிருந்தால், 2026 சட்டப்பேரவை தேர்தலில் இவர்களே பொறுப்பாளர்களாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, நேற்று மாநாட்டு பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் செயல்வடிவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முழு மாநாடு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக புஸ்ஸி ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், பொருளாதார குழு, சட்ட நிபுணர் குழு, வரவேற்பு குழு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு, சுகாதாரக் குழு, போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு, வாகன நிறுத்த குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

Also Read: ரெட் அலர்ட்… சென்னை உட்பட பல மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம்!

மேலும், அவசரகால குழு, கொடிக்கம்பம் அமைப்பு குழு, கட்டுப்பாட்டு அறைக் கண்காணிப்பு குழு, சமூக ஊடகக் குழு, விளம்பர குழு, துப்புரவு குழு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களில் மட்டும தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் அந்தந்த குழு பணிகளை மேற்கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Latest News