TVK Party: ”நீங்கள் எதிர்பார்க்கும் குரலில் பேச முடியாது” விமர்சனங்களுக்கு துர்காதேவி பதிலடி!
Tamilaga Vettri Kazhagam: கல்லூரி படித்து முடிந்ததும் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என்னை இணைத்துக் கொண்டேன். எனக்கு இப்போது 28 வயது ஆகும் நிலையில் திருமணத்திற்கு பிறகும் கணவரின் ஊக்கம் என்னை இன்னும் விஜய் மக்கள் இயக்கத்தில் தீவிரமாக இயங்க வைத்தது. விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விருதுநகரில் நடக்கும் கூட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டு பேசுவேன். நான் ரொம்ப தைரியமாக பேசுவதாக எல்லோரும் பாராட்டுவார்கள்.
தமிழக வெற்றிக் கழகம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. 8 லட்சம் தொண்டர்கள் கலந்துக் கொண்டதாக சொல்லப்படும் இந்த மாநாட்டில் த.வெ.க., தலைவர் விஜய்யின் அனல் பறந்த அரசியல் பேச்சு மிகப்பெரிய அளவில் விவாதமானது. அதேசமயம் இந்நிகழ்வை துர்கா தேவி என்பவர் தொகுத்து வழங்கினார். அவர் தமிழக வெற்றி கழக மாநாட்டில் பேசியது கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் குரல் எழுந்துள்ள நிலையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில், “சிறுவயதில் இருந்து நான் நன்றாக கவிதை எழுதுவேன். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கையால் மாநில அளவில் முதல் பரிசு வாங்கியிருக்கிறேன். கலைஞர் 90 புத்தகத்திலும் எனது கவிதை இடம் பெற்றிருக்கிறது. இப்படி கட்டுரை கவிதை, பேச்சுப்போட்டி என நிறைய நிகழ்வுகளில் கலந்து கொண்டு பரிசுகள் வென்றிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினர் கொடுத்த ஊக்கம்
மேலும் என்னுடைய அப்பா எப்போதும் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். அந்த ஊக்கம் தான் தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை தொகுத்து வழங்கும் அளவுக்கு என்னை முன்னேற்றியுள்ளது. நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் விஜய்யின் ரசிகை தான். அவருடைய ஒவ்வொரு பிறந்தநாள் அன்று ரத்த தானம் செய்வது, ஏழைகளுக்கு உதவுவது என என்னால் முடிந்ததை செய்து கொண்டிருப்பேன்.
கல்லூரி படித்து முடிந்ததும் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என்னை இணைத்துக் கொண்டேன். எனக்கு இப்போது 28 வயது ஆகும் நிலையில் திருமணத்திற்கு பிறகும் கணவரின் ஊக்கம் என்னை இன்னும் விஜய் மக்கள் இயக்கத்தில் தீவிரமாக இயங்க வைத்தது. விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விருதுநகரில் நடக்கும் கூட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டு பேசுவேன். நான் ரொம்ப தைரியமாக பேசுவதாக எல்லோரும் பாராட்டுவார்கள். அந்த அறிமுகம்தான் பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களின் பார்வைக்கு என்னை கொண்டு சென்றது.
Also Read: தமிழக வெற்றிக் கழக மாநாடு.. தொகுத்து வழங்கிய பெண் யார் தெரியுமா?
தமிழக வெற்றிக் கழக பேச்சாளராக மாறிய தருணம்
திடீரென ஒரு நாள் கழகப் பேச்சாளராக உங்களைத் தேர்ந்தெடுத்து உள்ளார்கள் என அழைப்பு வந்தது. ஆனால் மாநாட்டை தொகுத்து வழங்க போகிறேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் ஒரு சாதாரண பெண். அதனால் மாநாட்டை தொகுத்து வழங்கும் பொறுப்பெல்லாம் நமக்கு தேர்வு செய்ய மாட்டார்கள் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி என்பதை செயலில் காட்டி விட்டார்கள்.
மாநாட்டுக்கு இரண்டு நாட்கள் முன்பு தான் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டை நீங்கள் தொகுத்து வழங்கப் போகிறீர்கள் என போனில் தெரிவித்தார்கள். அதைக் கேட்டதும் எனக்கு தலைகால் புரியாமல் நடப்பதெல்லாம் உண்மையா என என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொள்ளும் அளவுக்கு இருந்தது. காரணம் விஜய்யை எனக்கு ரொம்ப பிடிக்கும். மக்கள் இயக்கத்தில் இருந்தாலும் அவரை இதுவரை நேரில் சந்தித்தது கூட இல்லை. அவரை நேரில் பார்ப்பது என்னோட வாழ்நாள் கனவாக, தவமாக இருந்தது என சொல்லலாம்.
விஜய்யை கண்டதும் எமோஷனல்
அவரை மேடையில் பார்த்ததும் எமோஷனல் ஆகிவிட்டேன். அதனால் தான் குரல் கொஞ்சம் மாறிவிட்டது. அதன் பிறகு என் பொறுப்பை உணர்ந்து சிறப்பாகவே தொகுத்து வழங்கினேன். விஜய் என்னை இரண்டு தடவை ரொம்ப நல்லா பேசினீங்கம்மா என மன நிறைவா பாராட்டியது சந்தோஷமா இருக்கிறது. நான் பேசியது எல்லாம் விமர்சிப்பதை பார்த்துவிட்டு எனக்கு சிரிப்பு தான் வந்தது. நல்ல குரல், நல்ல நிறம் இருக்க வேண்டும் என நினைப்பது தவறான சிந்தனை. அதனை வைத்து என்னை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் ஒரு தமிழ் மண்ணைச் சார்ந்த பெண். அதனால்தான் எல்லா மேடைகளிலும் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் என பேச ஆரம்பிப்பேன்.
Also Read: தீபாவளி நாளில் இப்படியெல்லாம் செய்யாதீங்க.. அப்புறம் பணத்துக்கு பிரச்னை தான்!
8 லட்சம் பேரை சமாளித்தேன்
மாநாட்டுக்கு 8 லட்சம் பேர் வந்திருந்ததாக சொல்லப்படும் நிலையில் அத்தனை கூட்டத்தையும் ஒரு 28 வயது இளம்பெண் தன் குரலால் கட்டுக்குள் வைத்திருந்ததை கவனிக்க வேண்டும். சில தொகுப்பாளர்கள் எங்களுக்கு மாநாட்டை தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்திருக்கலாம். இந்தக் குரலுக்கு நானே பேசியிருப்பேன் என தெரிவிக்கிறார்கள். பிரபலமாக வேண்டுமென்றால் எங்களைப் போன்ற கிராமத்து பெண்கள் என்றைக்கு தான் வெளியில் தெரிவது? என துர்கா தேவி கேள்வி எழுப்பியுள்ளார். அத்தனை ஆர்ப்பரிப்பு குரல்களையும் கடந்து என்னுடைய குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதை நினைத்து அதை சாதித்தும் காட்டி விட்டேன். இந்த விஷயத்தில் என்னுடைய அப்பா, கணவர், இரண்டு வயது குழந்தை என எல்லோருக்கும் சந்தோஷம் தான்.
நீங்கள் எதிர்பார்ப்பது போல இருக்க முடியாது
துர்கா தேவியின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஆகும். அவர் திருமணத்திற்குப் பிறகு கடந்த மூன்று வருடமாக கணவருடன் மதுரையில் வசித்து வருகிறார். தம்பதியினர் இருவரும் தனியார் கல்லூரிகளில் விரிவுரையாளராக இருக்கிறார்கள். குழந்தை பிறந்திருந்ததால் விடுமுறையில் இருக்கும் துர்கா தேவி மாநாட்டுக்காக தன்னுடைய மகளை அம்மாவிடம் விட்டுவிட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். என்னை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தேர்வு செய்த பொதுச்செயலாளர் ஆனந்துக்கு இந்த நேரத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பின்னணி பற்றி எல்லாம் கவலைப்படாமல் நீங்க பேசுங்க என உத்வேகப்படுத்தினார். என்னுடைய குரல் தான் என்னுடைய பலம். நீங்கள் எதிர்பார்க்கும் குரலில் என்னால் பேச முடியாது. கடவுள் கொடுத்த குரலில் தான் பேச முடியும். திறமையை மட்டும் எப்போதும் பாருங்கள். அதுதான் அழகு என துர்கா தேவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.