மதச்சார்பற்ற சமூக நீதி… தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடல் வெளியானது!
Tamilaga Vettri Kazhagam: Ideology Song | தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடல் மாநாட்டில் ஒலிபரப்பப்பட்டது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனத் தொடங்கும் அதில் திருவள்ளூவர், பெரியார், அம்பேத்கர், காமராஜர் வழியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பயணம் இருக்கும் என்று கொள்கை பாடலில் கூறப்பட்டுள்ளது.
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் கட்சியின் கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தனது கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம்(Tamizhaga Vetri kazhagam) என்று அறிவித்தார். கட்சி பெயரில் எழுதுப் பிழை இருப்பதாக பலர் கருத்து தெரிவித்ததும் கட்சியின் பெயரினை, தமிழக வெற்றிக் கழகம் என மாற்றி அறிவித்தார். இதையடுத்து, அவர் சமூக பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த அவர், வாழ்த்து செய்திகளை மட்டும் பதிவிட்டு வந்தார். இதனால் பல விமர்சனங்களையும் சந்தித்து வந்தார் விஜய். களத்தில் இருப்பவர் தான் தலைவர் என்று. இந்த நிலையில் இன்று விஜயின் மாநாடு மிக பிரமாண்டமாக நடைப்பெற்று வருகின்றது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் இன்று நடைபெறும் மாநாட்டில் கலந்துகொண்டு மாநாட்டிற்காக போடப்பட்ட ரேம்ப் வாக்கின் இறுதிவரை சென்று தொண்டர்களுக்கு வணக்கத்தைக் தெரிவித்த விஜய் அவர்கள் அளித்த கட்சி துண்டினை தனது கழுத்தில் போட்டுக்கொண்டு சென்றார். மிகுந்த உற்சாகத்துடன் ரேம்பில் நடந்த விஜயை பார்த்து தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
Also read… தொண்டர்களின் ஆரவாரத்துடன் உற்சாகமாக மாநாட்டு மேடையில் ரேம்ப் வாக் செய்த விஜய்
Tamilaga Vettri Kazhagam: Ideology Song | தமிழக வெற்றிக் கழகம்: கொள்கைப் பாடல்https://t.co/WOaifpxHSd#TVKIdeologySong #ThalaivarVijay #VettriKolgaiThiruvizha
புதியதோர் விதி ஒன்றை
புதுமையாய் நாம் செய்வோம்!வெற்றி நிச்சயம். pic.twitter.com/tpdogTIRoV
— TVK Vijay (@tvkvijayhq) October 27, 2024
அதனை தொடந்து மேடைக்கு வந்த விஜய் சுதந்திர போராட்ட தியாகிகளின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தனது கட்சியின் கொடியை 100 அடி கம்பத்தில் ஏற்றினார் விஜய். அதனை தொடர்ந்து கட்சியின் உறுதி மொழி ஏற்க்கப்பட்டது. பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடல் மாநாட்டில் ஒலிபரப்பப்பட்டது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனத் தொடங்கும் அதில் திருவள்ளூவர், பெரியார், அம்பேத்கர், காமராஜர் வழியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பயணம் இருக்கும் என்று கொள்கை பாடலில் கூறப்பட்டுள்ளது.