TVK Party: கட்சியில் இவர்களுக்கு மட்டுமே பதவி.. விஜய்யின் முடிவால் தொண்டர்கள் ஷாக்!
Tamilaga Vettri Kazhagam: நாம் அனைவரும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். 2026 தேர்தலில் விஜயை முதலமைச்சர் பதவியில் அமர வைக்க வேண்டும். உங்கள் மனதிற்கு சின்ன சங்கடம் ஏற்பட்டாலும் நீங்கள் தளபதியின் புகைப்படம் பார்த்தால் எல்லாம் பறந்து போய்விடும்.
தமிழக வெற்றிக் கழக கட்சியில் உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்படும் என தலைவர் விஜய் உறுதியாக உள்ளதாக பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “பல்வேறு கட்சிகளில் இருந்து நம்முடைய கட்சிக்கு தொண்டர்கள் வருகிறார்கள். அந்த நண்பர்களை எல்லாம் நாம் மதிக்க வேண்டும். அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும். அவர்களுடன் நாமும் நம்முடன் அவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதேசமயம் ஒன்றை மட்டும் நான் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். தலைவர் தளபதி விஜய் , யார் அன்று முதல் இன்று வரை கொடி கட்டி சைக்கிளில் சென்று போஸ்டர் ஒட்டி பணி செய்து வருகிறாரோ அந்த தொண்டருக்கு தான் பதவி வழங்கப்படும் என சொல்லி இருக்கிறார். யார் உழைத்தார்களோ அவர்களுக்கு மட்டும்தான் பதவி. உழைக்காதவர்கள் யாருக்கும் கட்சியில் பதவி கொடுக்கப்பட மாட்டாது எனவும் ஆனந்த் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அதேசமயம் நாம் அனைவரும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். 2026 தேர்தலில் விஜயை முதலமைச்சர் பதவியில் அமர வைக்க வேண்டும். உங்கள் மனதிற்கு சின்ன சங்கடம் ஏற்பட்டாலும் நீங்கள் தளபதியின் புகைப்படம் பார்த்தால் எல்லாம் பறந்து போய்விடும். தமிழக வெற்றி கழகத்தில் நான் பெரியவன் நீ பெரியவன் என்ற எதுவும் கிடையாது. பொதுச் செயலாளர் முதற்கொண்டு எல்லாம் தளபதி விஜய்க்கு கீழ் ஒரு தொண்டன் தான் எனவும் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். கட்சிப்பதவி தொடர்பாக விஜய் எடுத்துள்ள முடிவு தொண்டர்களுக்கே ஷாக்காக அமைந்துள்ளது.
Also Read: இணையத்தை கலக்கும் கீர்த்தியின் கல்யாண கொண்டாட்ட போட்டோஸ்
எகிறும் எதிர்பார்ப்பு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். 2026 ஆம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தல் தான் தன்னுடைய இலக்கு என்று அறிவித்து அதற்கேற்ப செயல்பட்டு வருகிறார். மேலும் முழு நேர மக்கள் பணியில் ஈடுபடும் வகையில் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் கடைசியாக நடிக்கும் 69ஆவது படத்தின் படப்பிடிப்பு முழு மூச்சாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் 2025 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.
இதனிடையே கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அறிமுகம் செய்யும் விழா நடைபெற்றது. சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த அந்த கொடியில் இரண்டு யானைகள், வாகை மலர், நட்சத்திரங்கள் என அனைத்தும் இருந்தது. இதனையடுத்து அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய்யின் முதல் அரசியல் பேச்சு மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.
Also Read: Cuddalore: ஆற்றில் சடலமாக கிடந்த 2 பெண் குழந்தைகள்.. தந்தையே வீசிய கொடூரம்!
அதன்படி திமுகவை அரசியல் ரீதியாக எதிரி என கடுமையாக விமர்சித்த விஜய் பாஜகவை கொள்கை ரீதியாக எதிரி என பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்த செயல்கள் மூலம் மற்ற கட்சிகளின் கவனத்தையும் தன் மீது விஜய் திருப்பி உள்ளார். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அவர் ஆட்சிக்கு வருவாரா இல்லையா என்பது பொதுமக்களின் கையில் இருக்கும் நிலையில், கண்டிப்பாக குறிப்பிட தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவார் என பலரும் கனித்துள்ளனர்