TVK Conference: இதய வாசலை திறந்து வைத்து காத்திருப்பேன்.. விஜய் 3வது முறையாக கடிதம்!
இந்த திருவிழாவை கொண்டாடுவதற்காக பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி பத்திரமாக வாருங்கள் எனவும் விஜய் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நாம் கழகத்தின் கொடியை கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள். உங்கள் வருகைக்காக வி சாலை எல்லையில் என் இரு கரங்களையும் விரித்தபடி இதய வாசலை திறந்து வைத்து காத்திருப்பேன். வாருங்கள் மாநாட்டில் கூடுவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.
விஜய் தொண்டர்களுக்கு கடிதம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு அக்கட்சியின் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு 3வது முறையாக கடிதம் எழுதியுள்ளார். அதில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கை திருவிழாவிற்காக மூன்றாவது முறையாக கடிதம் எழுதுகிறேன். மாநாடு நிகழப்போகும் அந்த தருணம் நமது மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது. உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள் நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பல மடங்கு கூட்டப் போகிறது. அதை வார்த்தைகளில் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு உலகமே உற்று நோக்கி போற்றும் விதமாக நம் வெற்றிக் கொள்கை திருவிழாவை கொண்டாடுவோம்” என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த திருவிழாவை கொண்டாடுவதற்காக பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி பத்திரமாக வாருங்கள் எனவும் விஜய் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நாம் கழகத்தின் கொடியை கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள். உங்கள் வருகைக்காக வி சாலை எல்லையில் என் இரு கரங்களையும் விரித்தபடி இதய வாசலை திறந்து வைத்து காத்திருப்பேன். வாருங்கள் மாநாட்டில் கூடுவோம்.
— TVK Vijay (@tvkvijayhq) October 25, 2024
நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளை செயல்படுத்த உறுதிப்பூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம். வி சாலை வியூகச் சாலையில் சந்திப்போம்” என தெரிவித்துள்ளார். இதனால் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Also Read: TN Goverment Jobs: மாதம் ரூ.1 லட்சம் சம்பளம்.. அரசு மருத்துவமனையில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!
தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள வி.சாலை என்னும் இடத்தில் நடைபெற உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் இன்னும் ஒரு படம் நடித்து விட்டு முழுநேர அரசியலுக்கு வரப்போவதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கட்சி தொடங்கிய அவர் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை பெரிய அளவில் அரசியல் அடியை எடுத்து வைக்கவில்லை. ஆனால் கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை கையில் பிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு முழு மூச்சாக தமிழக வெற்றிக் கழகத்தை எட்டுத்திக்கும் பரப்பி வருகின்றனர்.
இப்படியான நிலையில் தான் மாநாட்டுக்கான அறிவிப்பு வெளியாகி இடமும் தேர்வு செய்யப்பட்டது. இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 700 சிசிடிவி கேமராக்கள், 15,000 எல்.இ.டி விளக்குகள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஒலி அமைப்பு ஆகியவற்றை நிறுவப்பட்டுள்ளது. மேலும் மாநாடு நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், தமிழ்த்தாய், காமராசர் ஆகியோரோடு விஜய்யின் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம் சேரன், சோழன், பாண்டிய மன்னர்களின் கட் அவுட்டுகளும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் சிறுவர்கள் முதியவர்கள் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் வரவேண்டாம் என சில தினங்களுக்கு முன் நடிகர் விஜய் கடிதம் வெளியிட்டு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதே சமயம் மாநாட்டிற்கு வரும் அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்பும் போது உறுதி செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மாநாடு நடைபெறும் இடத்திற்கு அருகில் ரயில் தண்டவாளமும், உட்பகுதியில் இருந்த கிணறும் முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு பந்தலின் வாயிலில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் ஏற்றப்போகும் கொடி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அங்கு பறக்கும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.