5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Vijay: “கூட்டணிக்கு அழைப்பு” 2026 தேர்தலுக்கு அஸ்திவாரம் போட்ட விஜய்!

தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகராக உள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டி பகுதிகளில் உள்ள வி.சாலையில் நடந்து முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள் ஆகியவற்றை விஜய் அறிவித்தார்.

TVK Vijay: “கூட்டணிக்கு அழைப்பு” 2026 தேர்தலுக்கு அஸ்திவாரம் போட்ட விஜய்!
த.வெ.க தலைவர் விஜய்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 27 Oct 2024 19:18 PM

தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகராக உள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டி பகுதிகளில் உள்ள வி.சாலையில் நடந்து முடிந்துள்ளது. கட்சி தொண்டர்களுக்கு மத்தியில் ரேம்ப் வாக் செய்தார். இருபுறமும் தொண்டர்கள் வீசிய கட்சி துண்டுகளை கழுத்தில் அணிந்து கொண்டு தொண்டர்களை நோக்கி கை அசைத்து மேடை நோக்கி விஜய் சென்றார். இதைத் தொடர்ந்து மாநாட்டு திடலில் இருந்த 101 அடி கொடி கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றினார் விஜய். பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடல், கோட்பாடு, குறிக்கோள், செயல் திட்டம் ஆகியவை அறிவிக்கப்பட்டது.

”ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு”

அதில், பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் வழிகாட்டிகளாக இருப்பார்கள் என்று விஜய் அறிவித்தார். பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கு மக்கள் அனைவரும் பிறப்பால் சமம், பாரபட்சமற்ற சமூகம் படைப்பது என்பது எங்களது கோட்பாடாகும் என்று அறிவித்தார்.

மேலும், ‘மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கை’ எங்களது கொள்கை என்றும் குறிப்பிட்டார். பின்னர், மாநாட்டு மேடையில் விஜய் பேசினார். அதில், திமுக, பாஜகவை தாக்கி பேசினார். பிளவுவாத சித்தாந்தம், ஊழல் மலிந்த கலாச்சாரம் ஆகியவை தான் எதிரிகள் என்று திமுக, பாஜகவை மறைமுகமாக தாக்கி பேசினார்.

Also Read: முடிவோடு தான் வந்திருக்கிறேன்.. பின் வாங்கும் எண்ணம் இல்லை – மாநாட்டில் விஜய் பேச்சு

தொடர்ந்து, அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த கூட்டணி குறித்து விஜய் அறிவித்தார். முன்னதாக, விஜய் யாருடன் கூட்டணி வைப்பார் என்ற சலசலப்பு தமிழக அரசியலில் இருந்து வருகிறது. இப்படியான சூழலில் இன்று நடந்த கட்சி மாநாட்டில் விஜய் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

“பாசிசமா? பாயாசமா?”

அதன்படி, “தமிழக வெற்றிக் கழக கட்சியுடன் கூட்டணி வைப்போருக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு உண்டு. 2026 சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள். தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்றால் விரும்பி வருவோருடன் இணைவேன்” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேலும், “சமூக நீதி என்ற போர்வையில் முகமூடிகளை அணிந்து ஊழல் செய்கின்றனர். திராவிட மாடல் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். என்ன தான் எங்களுக்கு நீங்கள் வர்ணம் பூச முயன்றாலும், மோடி மஸ்தான் வித்தை காட்டினாலும் எங்களிடம் அது ஈடுபடாது.

“இறங்கி அடிக்க வேண்டும் என்றே வந்துவிட்டேன்”

பெரியார், அண்ணா பெயரை சொல்லி கொள்ளையடிக்கும் ஒரு குடும்பம் நமது அரசியல். பிளவுத அரசியல் நமது சித்தார்ந்த எதிரி. யார் அரசியலுக்கு வந்தாலும் குறிப்பிட்ட கலர் பூசுகிற பூச்சாண்டி காட்டிக் கொண்டு இருக்காங்க.. பாசிசம்.. பாசிசம்.. சிறுபாண்மை, பெரும்பான்மை என்று பேசுவதே வேலையாகிவிட்டது.

அவங்க பாசிசம்னா.. நீங்க பாயாசமா?”  என்று கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “திராவிடமும், தமிழ் தேசியமும் எங்களத இரு கண்கள். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள்.

Also Read: மதச்சார்பற்ற சமூக நீதி… தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடல் வெளியானது!

சினிமாவில் இருந்து வந்துள்ளதால் என்னை கூத்தாடி என்று விமர்சிக்கின்றனர். திராவிடம் வளர்ந்ததே கூத்தை வைத்துதான். கூத்தாடி என்றால் கேவலமான சொல்லா? அரசியலுக்கு எம்ஜிஆர், என்டிஆர் வந்த போது கூத்தாடிகள் என்று தான் சொன்னார்கள். பூதக்கண்ணாடி போட்டு எத்தனை முறை யோசிப்பது? அதனால் இறங்கி அடிக்க வேண்டும் என்றே வந்துவிட்டேன்” என்றார்.

Latest News