5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

விஜய் டிக் செய்ய உள்ள 120 பேர் யார்? த.வெ.க கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விரைவில் நியமனம்!

TVK Vijay : தமிழக வெற்றிக் கழக கட்சியில் விரையில் 120 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பணியில் அக்கட்சியின் தலைவர் விஜய் தீவிரமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரையில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் டிக் செய்ய உள்ள 120 பேர் யார்? த.வெ.க கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விரைவில் நியமனம்!
த.வெ.க விஜய்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 16 Nov 2024 17:09 PM

தமிழக வெற்றிக் கழக கட்சியில் விரையில் 120 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பணியில் அக்கட்சியின் தலைவர் விஜய் தீவிரமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் உச்சபட்ச நடிகராக உள்ள விஜய், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை குறி வைத்து தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கினார். மேலும், 2026 தேர்தலை கருத்தில் கொண்டு தனது ஒவ்வொரு நகர்வையும் எடுத்து வருகிறார். கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே கட்சி தொடங்கிய அறிமுகப்படுத்தினார்.

த.வெ.க கட்சியின் மாவட்ட செயலாளர்கள் விரைவில் நியமனம்

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடத்தினார். அதில் அவர் பேசிய பேச்சுக்களும், வெளியிட்ட கொள்கைகளும் தமிழக அரசியல் களத்தில் பேசும் பொருளாக மாறியது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் குறிப்பிட்டார். அதிலும் திமுகவை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். அதே நேரத்தில் திராவிடமும், தமிழ்த் தேசியமும் தனது இரு கண்கள் என்று தெரிவித்தார்.

மேலும், 2026 தேர்தலில் கூட்டணிக்கு தயார் என்றும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்றும் விஜய் திட்டவட்டமாக கூறினார். விஜய்யின் கொள்கைகள் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

Also Read : வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவில் கிடந்த வண்டு.. கடுப்பான பயணிகள்!

120 மாவட்ட செயலாளர்கள் யார்?

அதே நேரத்தில் திமுகவில் சிலரும் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கட்சியை சட்டசபைத் தேர்தலுக்குள் அனைத்து மட்டத்திலும் வலுப்படுத்த தயாராகி வருகிறார். அவரது கட்சியில் பெரும்பாலும் ரசிகர்கள் மன்றத்தினர் தான் உள்ளனர்.

புதிய உறுப்பினர் சேர்க்கையும் தீவிரமாக நடந்து வருகிறது.  இந்த நிலையில், மாவட்மட செயலாளர்களையும் நியமிக்க விஜய் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழக சார்பில் 120 மாவட்ட அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read : அமரன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு.. நெல்லை திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு..

இந்த அமைப்புகளுக்கு முதல் கட்டமாக மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை தெரிவு செய்யம் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பெரும்பாலும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தான மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

தற்போது அதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது. விரைவில் பட்டியல் தயாரிக்கப்பட்டு டிசம்பர் முதல் வாரத்தில் இதுபற்றிய அறிவிப்பை விஜய் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2026 தேர்தலை குறிவைக்கும் விஜய்

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனைப்போட்டி நிலவு சூழலில், தற்போது தமிழக வெற்றிக் கழகமும் போட்டியில் குதித்துள்ளது. அரசியலில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் விஜய் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்தார்.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் அவரது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இதுதான் கடைசி படம் என்று கூறி, அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ளார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Also Read : 3 மாதம் கடன் செலுத்தாததால் ஆத்திரம்.. வீட்டில் அத்துமீறிய நிதி நிறுவன ஊழியர்கள்.. நடந்தது என்ன?

குறிப்பாக விஜய்யின் மாநாட்டிற்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு பேச்சுள் அடிப்பட்டது. மாநாட்டில் அதிமுகவை விமர்சிக்காத விஜய், எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்து 2026 தேர்தலில் களமிறங்குவார் என்று கூறப்பட்டது.

மேலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் கூறியது, திருமாவளவனுடன் கூட்டணி என்றும் பேச்சுக்கள் அடிப்பட்டது. இப்படியாக பல கருத்துகள் பரவி வருகிறது. இருப்பினும், இதுகுறித்து விஜய் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News