மழலை போல உணர்கிறேன்… மாநாட்டில் பேசத் தொடங்கினார் விஜய்!
Thalapathy Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசத் தொடங்குவதற்கு முன்னதாக மேடையில் இருந்து கீழே சென்று தனது பெற்றோர்களான சந்திரசேகர் மற்றும் சோபாவை கட்டி அணைத்து ஆசி பெற்றார். அதனை தொடர்ந்து தனது நண்பர்களிடமும் வாழ்த்து பெற்றுவிட்டு மேடைக்கு திரும்பிய விஜய் பேசத் தொடங்கினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் கலந்துகொண்ட விஜய் தனது பெற்றோர்களிடம் ஆசி பெற்றுக்கொண்டு தற்போது பேசத் தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் இன்று நடைபெறும் மாநாட்டில் கலந்துகொண்டு மாநாட்டிற்காக போடப்பட்ட ரேம்ப் வாக்கின் இறுதிவரை சென்று தொண்டர்களுக்கு வணக்கத்தைக் தெரிவித்தார் விஜய். அதனை தொடர்ந்து தொண்டர்கள் அளித்த கட்சி துண்டினை தனது கழுத்தில் போட்டுக்கொண்டு சென்றார். மிகுந்த உற்சாகத்துடன் ரேம்பில் நடந்த விஜயை பார்த்து தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். பின்னர் தமிழ்த் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதனைத் தொடந்து கட்சியின் உறுதிமொழி மற்றும் கட்சியின் கொள்கைப் பாடலும் ஒளிபரப்பப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளும் மாநாட்டில் பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசத் தொடங்குவதற்கு முன்னதாக மேடையில் இருந்து கீழே சென்று தனது பெற்றோர்களான சந்திரசேகர் மற்றும் சோபாவை கட்டி அணைத்து ஆசி பெற்றார். அதனை தொடர்ந்து தனது நண்பர்களிடமும் வாழ்த்து பெற்றுவிட்டு மேடைக்கு திரும்பிய விஜய் பேசத் தொடங்கினார்.
அப்போது விஜய் பேசியதாவது, ஒரு குழந்தை முதல்முதலா தனது அம்மாவை அம்மா என்று அழைக்கும் போது அந்த அம்மாவிற்கு ஒரு சிலிர்ப்பு ஏற்படும். அந்த சிலிர்ப்பு எப்படி இருந்தது என்று அந்த அம்மாவிடம் கேட்டாள் அவர்களால் அதை சொல்ல முடியும் ஆனால் அந்த குழந்தையிடம் அம்மா என்று சொல்லும் போது ஏற்பட்ட உணர்வை விளக்க சொன்னால் அந்த குழந்தைக்கு அதை விளக்க முடியாது. குழந்தைக்கிட்ட என்ன கேட்டாலும் அதுக்கு மழலை மாறாத சிரிப்பு மட்டும் தான் வரும். அப்படி தான் இருக்கிறது எனக்கு.
ஆனால் அப்படி இருக்கும் ஒரு குழந்தை முன்னாடி ஒரு பாம்பு படம் எடுத்து நின்னாலும் அந்த குழந்தை தனது அம்மா முன்னாடி எப்படி சிரிச்சுதோ அப்படிதான் அந்த பாம்பையும் எடுத்தும் விளையாடும். இங்க அந்த பாம்புதான் அரசியல் அதை கையில பிடிச்சு விளையாட ஆரம்பிக்கிறதுதான் உங்க… (தொண்டர்களின் தளபதி குரல்). பாம்பா இருந்தாலும் பாலிடிக்ஸா இருந்தாலும் சிரிச்சுக்கிட்டே சீரியஸா விளையாடுறதுதான் முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.