TVK Vijay : ‘தமிழ்நாட்டில் போதைபொருள்.. பயமா இருக்கு’ – மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய் - Tamil News | | TV9 Tamil

TVK Vijay : ‘தமிழ்நாட்டில் போதைபொருள்.. பயமா இருக்கு’ – மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய்

Tamilaga Vettri Kazhagam vijay speech: போதை பொருள் பழக்கத்தில் ஈடுபடக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் த.வெ.க தலைவர் விஜய் மாணவர்களை உறுதி மொழி ஏற்க வைத்தார், அதில் “ say no to temporary pleasures, say no to drugs" என விஜய் கூற மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். மேலும், “ தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாதவர்கள் எதற்கும் கவலை படவேண்டாம். வெற்றி தோல்வியை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டு பேசினார்.

TVK Vijay : தமிழ்நாட்டில் போதைபொருள்.. பயமா இருக்கு - மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய்

மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜய்

Published: 

28 Jun 2024 11:38 AM

த.வெ.க தலைவர் விஜய் மாணவர்கள் சந்திப்பு: 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை நடிகர் மற்றும் த.வெ.க தலைவர் விஜய் இன்று சந்தித்து உதவித்தொகை வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவ்ர், “ உங்கள் நட்பு வட்டாரங்களில் ஏதாவது ஒரு சில விஷயங்கள் தவறாக இருந்தால், தவறான பழக்கங்களில் ஈடுபட்டவர்களை நல்வழிக்கு கொண்டு வாருங்கள். தவறான பழக்கத்தில் மட்டும் ஈடுபட கூடாது. உங்களுடைய அடையாளத்தை எக்காரணத்திற்கு கொண்டும் இழக்க கூடாது. இதை குறிப்பிட்டு சொல்ல காரணம் என்னவென்றால் சமீப காலமாக தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது” என பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி, தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்து இருந்தார். மேலும், தேர்தல் ஆணையத்திலும் தனது கட்சியை பதிவு செய்துள்ள விஜய் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனக்கு இலக்கு என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அரசியல் கட்சி தொடங்கிய பின்பு முதல் முறையாக மாணவ, மாணவிகளை விஜய் சந்தித்து வருகிறார். கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள, தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குகிறார். முதற்கட்டமாக இன்று 21 மாவட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறார்.

அதன்படி, அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை விஜய் சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பு சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் பழக்கம்:

முன்னதாக இந்நிகழ்ச்சியில் பேசிய த.வெ.க தலைவர் விஜய், “ உங்கள் நட்பு வட்டாரங்களில் ஏதாவது ஒரு சில விஷயங்கள் தவறாக இருந்தால், தவறான பழக்கங்களில் ஈடுபட்டவர்களை நல்வழிக்கு கொண்டு வாருங்கள். தவறான பழக்கத்தில் மட்டும் ஈடுபட கூடாது. உங்களுடைய அடையாளத்தை எக்காரணத்திற்கு கொண்டும் இழக்க கூடாது. இதை குறிப்பிட்டு சொல்ல காரணம் என்னவென்றால் சமீப காலமாக தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. ஒரு பெற்றோர், அரசியல் கட்சி தலைவர் என்ற முறையில் எனக்கும் அச்சமாக உள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பது அரசின் கடமை என்பதை பற்றி பேச நான் இங்கு வரவில்லை. சில நேரங்களில் நம் வாழ்க்கையை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் பாதுகாப்பை நாம் தான் உறுதி படுத்திக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து போதை பொருள் பழக்கத்தில் ஈடுபடக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் த.வெ.க தலைவர் விஜய் மாணவர்களை உறுதி மொழி ஏற்க வைத்தார், அதில் “ say no to temporary pleasures, say no to drugs” என விஜய் கூற மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். மேலும், “ தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாதவர்கள் எதற்கும் கவலை படவேண்டாம். வெற்றி தோல்வியை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டு பேசினார்.

Also Read: ஒரு சில அரசியல் கட்சிகள்.. சோஷியல் மீடியா.. மாணவர்கள் சந்திப்பில் விஜய் பேசிய விஷயம்!

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!